......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 18 July 2013

புதிய காதலன் மீது பழைய காதலன் கத்திக்குத்து

பேராதனை பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருடத்தில் கல்விப்பயிலும் மாணவியின் புதிய காதலன் மீது பழைய காதலன் கத்தியால் குத்தியுள்ளார்.

காதலியை ஏமாற்றிய காதலனுக்கு விளக்கமறியல்

-லக்மால் சூரியகொட

காதலியிடமிருந்து 16 இலட்சம் ரூபா மற்றும் 54 பவுண் நகைகளை ஏமாற்றிய காதலனை எதிர்வரும் 23 ஆம் திகதிவரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

Sunday, 14 July 2013

மாணவியை வன்புணர்ந்து தீவைத்து எரித்த கொடூரக் கும்பல்

கல்லூரி மாணவியை வன்புணர்ந்த ஒரு கும்பல், அவரை தீவைத்தும் எரித்துள்ளது.

Tuesday, 9 July 2013

நேசித்த பெண்ணை வல்லுறவுக்குட்படுத்தியவர் கைது

-எஸ்.எம்.மும்தாஜ்

தான் நேசித்திருந்த பெண்ணொருவரை கடத்திச் சென்று வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் முச்சக்கரவண்டிச் சாரதியொருவரை நேற்று திங்கட்கிழமை வென்னப்புவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

Sunday, 30 June 2013

நடமாடும் விபசார நிலையம் சுற்றிவளைப்பு ஐந்து பெண்கள் கைது; வாகனமும் மீட்பு

நடமாடும் விபசார நிலையமொன்றினை சுற்றிவளைத்த வலானை குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் அந்த விபசார நிலையத்தினை நடத்தி வந்த பெண் அடங்கலாக ஐவரைக் கைது செய்துள்ளனர்.

Saturday, 29 June 2013

பேய் விரட்ட வந்த யுவதியை நிர்வாணமாக்கி பல நாட்களாக எண்ணெய் பூசி தேசிக்காய் வெட்ட முன் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட நபர் கைது

By Hafeez 
தனக்கு பிடித்திருக்கும் அசுத்த ஆவியை விரட்ட வந்த யுவதி ஒருவரை, நிரவாணமாக்கி உடல் முழுவதும் எண்ணெய்பூசி தேசிக்காய் வெட்டுவதற்கு முன்னர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட சம்பவம் பொல்கஸ்வோவிட்ட சியம்பலாகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பொல்கஸ்வோவிட்ட சியம்பலாகொட பகுதியில் உள்ள 17 வயதுடைய யுவதி ஒருவர், தனக்கு 'களுகுமாரி" என்ற அசுத்த உடம்பினுள் புகுந்துள்ளதாகவும் அதனை விரட்ட வேண்டும் என கோரி அப்பிரதேசத்தில் இருந்த 51 வயதுடைய பூசகர் ஒருவரிடம் சென்றுள்ளார்.

இதனையடுத்து குறித்த பூசகர், தினமும் நிர்வாணமாக எண்ணெய் பூசி தேசிக்காய் வெட்டினாலேயே அசுத்த ஆவியை விரட்ட முடியும் என்று கூறியுள்ளார். இதற்கு சம்மதித்த குறித்த யுவதியை பல நாட்களாக நிர்வாணப்படுத்தி எண்ணெய் பூசி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று வழமைபோன்று எண்ணெய் பூசி தேசிக்காய் வெட்ட வேண்டும் என கூறிய பூசகர் தேசிக்காய் வெட்டுவதற்கு முன்னர் யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்து தப்பி வந்த யுவதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து குறித்த பூசகர் கைது செய்யப்பட்டு கெஸ்பேவ நீதிமன்ற நீதவான் சமன் மதநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்திய போது குறித்த நபரை எதிர்வரும் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

பொல்கஸ்வோவிட்ட சியம்பலாகொட பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய சந்திரசிரி பெரேரா என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=5558 )

Tuesday, 18 June 2013

நிர்வாணமாக குளித்த பெண்கள் இருவர் கைது

போதையில் நிர்வாணமாக குளித்துக்கொண்டிருந்த பெண்கள் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Monday, 17 June 2013

வல்லுறவுக்குட்படுத்திய தந்தை: தலையை வெட்டிக் கொன்ற மகள்

வீட்டில் யாரும் இல்லாத வேளையில் தன்னை வல்லுறவுக்குட்படுத்திய தந்தையை மகளொருவர் தலையை வெட்டிக் கொன்ற சம்பவம் பபுவா நியூ கினியாவில் இடம்பெற்றுள்ளது.

Saturday, 15 June 2013

பெண் கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை

-எம்.இஸட்.ஷாஜஹான் 
     பெண் ஒருவரை  கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை குற்றவாளியாக இனங்கண்ட நீர்கொழும்பு மேல் நீதிமன்ற அவருக்கு இன்று வியாழக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Thursday, 13 June 2013

இரு குழந்தையின் தாய் ஒரு குழந்தையின் தந்தை காலி கோட்டைக்கு அருகில் விஷமருந்திய நிலையில் மீட்பு

கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஒரு ஜோடி கடந்த 9 ஆம் திகதி காலி கோட்டைக்கருகே விஷம் அருந்தி மயங்கிக் கிடந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு கராபிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

68 வயதான பெண் 48 வயதான நபரால் பாலியல் துஷ்பிரயோகம்

திருமணமாகாத 68 வயதுப் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய இரு பிள்ளைகளின் தந்தையான 48 வயது நபரொருவரை தம்புள்ளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Wednesday, 12 June 2013

மனைவியுடன் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்த கள்ளக்காதலனை கத்தியால் வெட்டிய கணவன் : யாழில் சம்பவம்

யாழ். நகரில் உள்ள திரையரங்கு ஒன்றில் தனது மனைவியுடன் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்த மனைவியின் கள்ளக்காதலனை அவரது கணவன் கத்தியால் வெட்டிய சம்பவம் ஒன்று யாழில் நடைபெற்றுள்ளது.

காதலனையும் நண்பனையும் அச்சுறுத்திய நபர்களால் யுவதி பாலியல் துஷ்பிரயோக

செவனகல சூரிவெவ பிரதேசத்தில் 17 வயது யுவதியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நால்வரில் மூன்று பேரை செவனகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Monday, 10 June 2013

மகள் துஷ்பிரயோகம்: தந்தை கைது

-சுமித்தி தங்கராசா

தனது 12 வயதான மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் தந்தையொருவரை யாழ். சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

Saturday, 8 June 2013

இந்தியாவில் கொடூரம்: 3 ஆண்டில் கற்கும் சிறுமி மீது, 9 இல் கற்கும் மாணவன் வல்லுறவு

இந்தியாவின், புதுச் சேரியில் 3 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் சிறுமியை, 9 ஆம் ஆண்டில் கற்கும் மாணவனொருவன் வல்லுறவுக்குட்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Wednesday, 5 June 2013

பணிப்பெண்ணாக மனைவியை அனுப்பிவிட்டு மனநோயாளி பெண்மீது பாலியல் துஷ்பிரயோகம்

மனநோயால் பீடிக்கப்பட்டிருந்த 33வயது பெண்ணொருவரை தொடர்ந்து ஆறு மாதங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்குப்படுத்திய 36வயது நபரொருவரைத் தேடி கட்டுகஸ்தோட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

புதுமணத் தம்பதியின் தேனிலவு அறையின் குளியலறையை எட்டிப்பார்த்த ஊழியர்

மாரவில கடற்கரைப் பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் தேனிலவை அனுபவிக்கச் சென்ற புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் தங்கியிருந்த அறையின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹோட்டலின் ஊழியரொருவரால் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து மணமகனின் நண்பர்கள் இருவரை மாரவில பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மகளை வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தைக்கு 60 வருட சிறை

மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் தந்தையொருவருக்கு 60 வருட சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்த சம்பவமொன்று கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 

Monday, 3 June 2013

இலங்கைப் பெண்களை சிங்கப்பூரில் விபசாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது!

இலங்கை யுவதிகளை தொழிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பலாத்காரமாக விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்த ஆனமடுவைச் சேர்ந்த நபர் ஒருவரை சிங்கப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Wednesday, 29 May 2013

பெற்றோரைப் பலியெடுத்த ஓரினச் சேர்க்கை


By M.Nesamani 

அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்று நம் ஆன்றோர்கள் சொல்லி வைத்தார்கள். ஆனால் அந்த நிலை படிப்படியாக மாறி அற்ப சொற்ப விடயங்களுக்காக தம் பெற்றோர்களையே பிள்ளைகள் படுகொலை செய்யுமளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளமையானது வேதனைக்குரிய விடயமாகும்.

ADD TEXT HERE