......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 12 June 2013

மனைவியுடன் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்த கள்ளக்காதலனை கத்தியால் வெட்டிய கணவன் : யாழில் சம்பவம்

யாழ். நகரில் உள்ள திரையரங்கு ஒன்றில் தனது மனைவியுடன் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்த மனைவியின் கள்ளக்காதலனை அவரது கணவன் கத்தியால் வெட்டிய சம்பவம் ஒன்று யாழில் நடைபெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த பெண்ணின் கணவன் கூலித்தொழிலாளி இவர் காலை கூலித் தொழிலுக்கு சென்றால் இரவில் தான் வீடு திரும்புவார். இதனைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திய குறித்த பெண் தனது தொலைபேசிக் கள்ளக்காதலனுடன் சென்று திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

இதனை குறித்த பெண்ணின் கணவனின் நண்பர் ஒருவர் தொலைபேசி மூலமாக அவருக்கு தெரிவித்துள்ளார். வேலையில் நின்ற கணவன் திடீரென கத்தியுடன் தியேட்டருக்குள் புகுந்துள்ளார்.

இதனால் சற்று நிமிடம் திரையரங்கு போர்க்களமாக மாறியது. குறித்த பெண்ணின் கள்ளக்காதலனுக்கு கத்தி வெட்டு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் அங்கு நின்ற ஆட்டோ ஒன்றில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

குறித்த பெண் தனது முகத்தை துணியால் போர்த்தியபடி நிற்க அவரது கணவன் மனைவியை தலைமுடியில் பிடித்து தரதர என இழுத்துச் சென்று தான் வந்த ஆட்டோவில் கொண்டு சென்றுள்ளார்.

இச்சம்பவத்தினால் திரையரங்கில் அரைமணி நேரம் தாமதமாக படம் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.


(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=5205 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE