......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 8 June 2013

இந்தியாவில் கொடூரம்: 3 ஆண்டில் கற்கும் சிறுமி மீது, 9 இல் கற்கும் மாணவன் வல்லுறவு

இந்தியாவின், புதுச் சேரியில் 3 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் சிறுமியை, 9 ஆம் ஆண்டில் கற்கும் மாணவனொருவன் வல்லுறவுக்குட்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவது,
புதுச் சேரியின் அரியாங்குப்பம் அடுத்த மணவெளி பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவருக்கு  10 வயது மகனும், 8 வயது மகளும் உள்ளனர்.
இவர்கள் இருவரும் மணவெளியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
கணவர் இல்லாத தமிழ்செல்வி கூலித் தொழில் செய்து குழந்தைகளை காப்பாற்றி வருகிறார்.
நேற்று இரவு அண்ணனும், தங்கையும்அழைத்து கொண்டு கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது மணவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவனொருவன், நாரயணனையும் சுமதியையும் நிறுத்தி கதைத்துள்ளான்.
பின்னர் சிறுமியின் அண்ணனை மாத்திரம் கடைக்கு போக சொல்லிவிட்டு சிறுமியை யாரும் இல்லாத மறைவிடத்திற்கு அழைத்து சென்று வல்லுறவுக்குட்படுத்தியுள்ளான்.
இந்த சம்பவத்தை  சிறுமி அழுது கொண்டே தனது தாய் தமிழ்செல்வியிடம் தெரிவித்துள்ளார்.
அதையடுத்து தமிழ்செல்வி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
புகாரின் பேரில் அரியாங்குப்பம் பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சிறுமியை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

பெற்றோர்கள் போராட்டம் சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய குற்றவாளிக்கு தகுந்த தண்டனை பெற்றுத் தர வேண்டும் என கோரி உறவினர்களும் அந்த பகுதி பொதுமக்களும், அரியாங்குப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


(மூலம்: http://www.virakesari.lk/article/world.php?vid=713 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE