......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 8 June 2013

சவுதி இளவரசரை கோபத்தில் ஆழ்த்திய போர்ப்ஸ்!

சொத்துமதிப்பினை குறைத்து மதிப்பிட்டுள்ளதாகக் கூறி  சவுதி நாட்டின் இளவரசர்களில் ஒருவரான அல்வாலீட் பின் தலால் போர்ப்ஸ் சஞ்சிகை மீது வழக்குத் தொடுத்துள்ளார்.

போர்ப்ச் சஞ்சிகை வெளியிட்ட உலகின் பணக்காரர்கள் வரிசையில்  அல்வாலீட் பின் தலாலின்  சொத்தின் மொத்தப் பெறுமதி 20பில்லியன் அமெரிக்க டொலர்களாக கணிக்கப்பட்டுள்ளதுடன், 26 ஆவது இடத்தினை அவருக்கு வழங்கியுள்ளது.
எனினும் அல்வாலீட் பின் தலால் இதனால் கடும் ஆத்திரத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது சொத்தின் மொத்தப் பெறுமதி 29.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதால் தான் முதல் பத்திற்குள் வர வேண்டிய இடத்தை இழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் சொத்தினை மதிப்பிடும் போது போர்ப் ஒரு தலைப்பட்சமாக செயற்படுவதாக அல்வாலீட் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் பிழையான கணிப்பினால் தனக்கும், நிறுவனமான கிங்டொம் ஹோல்டிங்ஸின் பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
இதனால் அவர் போர்ப்ஸ் சஞ்சிகையின் வெளியீட்டாளர் ரண்டால் லேம், மற்றும் இரு ஊடகவியலாளர்களுக்கு எதிராக லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அல்வாலீட் பின் தலாலின்  கிங்டொம் ஹோல்டிங்ஸ் அப்பிள், பேஸ்புக், டுவிட்டர் மற்றும் நிவ்ஸ் கோர்ப் ஆகிய நிறுவனங்களின் பங்குதாரராக உள்ளது. அதுமட்டுமன்றி செவோய் ஹோட்டல், நிவ்யோர்க்கிலுள்ள த பிளாஸா, போன்ற பல சொத்துக்களுக்கு சொந்தக்காரர் தலால் என்பது குறிப்பிடத்தக்கது.


(மூலம்: http://www.virakesari.lk/article/world.php?vid=712 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE