......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 15 June 2013

பெண் கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை

-எம்.இஸட்.ஷாஜஹான் 
     பெண் ஒருவரை  கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை குற்றவாளியாக இனங்கண்ட நீர்கொழும்பு மேல் நீதிமன்ற அவருக்கு இன்று வியாழக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமானதையடுத்தே நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ.கபூர் மரணை தண்டனை விதித்து தீர்;ப்பளித்தார். மினுவாங்கொட, கோப்பியாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான  கருணாமுனி தினேஷ் பெர்னாண்டோவுக்கே மரணை தண்டனை விதிக்கப்படட்டுள்ளது. திருமணமான குறித்த நபர், மினுவாங்கொட, கோப்பியாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதான குருவிட்ட ஆராச்சிகே தயாவதி என்ற பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்ததாக பிரதிவாதி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டடிருந்ந்தது.   இச்சம்பவம் 2005, ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி மினுவாங்கொட, கோப்பியாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் பேத்தியுடன் பிரதிவாதி காதல் தொடர்பு கொண்டுள்ளார்.இதற்கு அவருடைய ஆச்சியான குருவிட்ட ஆராச்சிகே தயாவதி எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.இதன் காரணமாக இக் கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. வழக்கு விசாரணைகளின் போது இக் கொலை சந்தேகத்துக்கிடமன்றி நிரூபணமானதை அடுத்து நீதிபதி பிரதிவாதிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். கொலை செய்யப்பட்ட பெண்ணின் பேத்தியை (காதலியை)  கொலை சம்பவத்தின் பின்னர் பிரதிவாதி திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


(மூலம்: http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/70759-2013-06-13-15-28-40.html#sthash.Y0sHbCZQ.dpuf )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE