......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 5 June 2013

மகளை வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தைக்கு 60 வருட சிறை

மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் தந்தையொருவருக்கு 60 வருட சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்த சம்பவமொன்று கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 

60 வருட சிறைத்தண்டனையும் 30 ஆயிரம் ரூபாவை தண்டப் பணமாகவும் செலுத்த உத்தரவிட்ட கேகாலை மேல் நீதிமன்றம், குறித்த தண்டப் பணத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 15 வருட கால சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 

தனது மகளை வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை கேகாலை மேல் நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்ப்படுத்தியதை அடுத்து அவர் மீதான குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. 

வழக்கை விசாரித்த கேகாலை மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர மேற்படி சந்தேகறபருக்கு 60 வருட கால சிறைத்தண்டனையும் 30 ஆயிரம் ரூபா தண்டமும் விதித்து தீர்ப்பளித்தார். 


(மூலம்: http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/69645--60-.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE