மாரவில கடற்கரைப் பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் தேனிலவை அனுபவிக்கச் சென்ற புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் தங்கியிருந்த அறையின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹோட்டலின் ஊழியரொருவரால் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து மணமகனின் நண்பர்கள் இருவரை மாரவில பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹோட்டல் ஊழியரைத் தாக்கி ஹோட்டல் முகாமையாளரிடம் ஒப்படைத்துவிட்டு வேறொரு ஹோட்டலுக்குச் செல்ல மணமகன் முயற்சித்துள்ளார்.
அப்போது அங்கு வந்த மணமகனின் நண்பர்கள் ஹோட்டல் ஊழியர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஹோட்டல் முகாமையாளர் மாரவில பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து அங்கு வந்த பொலிஸார் மணமகனின் நண்பர்கள் இருவரைக் கைது செய்துள்ளனர். இருந்தும் குளியலறைக்குள் எட்டிப் பார்த்த ஹோட்டல் ஊழியர் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=5037 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.