......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 18 July 2013

புதிய காதலன் மீது பழைய காதலன் கத்திக்குத்து

பேராதனை பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருடத்தில் கல்விப்பயிலும் மாணவியின் புதிய காதலன் மீது பழைய காதலன் கத்தியால் குத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

மாணவி தனது புதிய காதலனுடன் செவ்வாய்க்கிழமை இரவு பேராதனை சரசவி உயனவில் நின்றுக்கொண்டிருந்துள்ளனர். 

அதன்போது பின்னால் வந்த இளைஞன் அந்த மாணவியை கத்தியால் குத்துவதற்கு முயன்றுள்ளார்.

இதன்போது, மாணவியின் அருகில் நின்ற அவரது காதலன் அதனை தடுப்பதற்கு முயன்றுள்ளார். எனினும் மாணவியின் காதலன் குறித்த நபர் கத்தியால் குத்தியுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் பேராதனை வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவியின் காதலனை கத்தியால் குத்திய  சந்தேகநபர் மாணவியை 10 வருடங்களாக காதலித்து வந்த பழைய காதலன் என்றும் மாணவி பல்கலைகழகத்திற்கு சென்றதன் பின்னர் கடந்த இரண்டுவருடங்களாக புதியவர் ஒருவரை காதலித்து வந்துள்ளதாக ஆரம்பக்கட்டவிசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

கத்தியால் குத்திய சந்தேகநபர் ஹட்டன் பிரதேசத்தைச்சேர்ந்தவர் என்று தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/75453-2013-07-17-18-11-11.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE