சவூதி அரேபிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட விசேட பொது மன்னிப்பின் அடிப்படையிலேயே நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இவர்கள் நாடு திரும்பவுள்ளனர் என தெரிவித்த இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இன்று பலர் நாடு திரும்பவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
தண்டனையின்றி நாடு திரும்புவதற்காக சவூதி அரேபிய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் பதிவு செய்யுமாறு விஸா காலாவதியான நிலையில்; தங்கியிருந்த இலங்கையர்களை வேண்டப்பட்டிருந்தனர்.
எனினும் பாரியளவிலான எண்ணிக்கையானோருக்கு தற்காலிக விஸா வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/75473-3000---.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.