......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 10 June 2013

மகள் துஷ்பிரயோகம்: தந்தை கைது

-சுமித்தி தங்கராசா

தனது 12 வயதான மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் தந்தையொருவரை யாழ். சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

யாழ். முனியப்பர் வீதி பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஒருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தந்தையொருவர் தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதாக கிடைத்த முறைப்பாடுகளை அடுத்தே இவர்  கைதுசெய்யப்படடுள்ளார்.

பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட தந்தை யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பரிசோதனையின் பின்னர் குருநகர் சிறுவர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் யாழ். சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/70191-2013-06-09-11-02-39.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE