......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 13 June 2013

68 வயதான பெண் 48 வயதான நபரால் பாலியல் துஷ்பிரயோகம்

திருமணமாகாத 68 வயதுப் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய இரு பிள்ளைகளின் தந்தையான 48 வயது நபரொருவரை தம்புள்ளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸார் சந்தேகநபரை தம்புள்ளை மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதவான் சஞ்சீவ ரத்னசிறி முன்னிலையில் ஆஜர் செய்த போது நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

இப்பெண் கடந்த 5ஆம் திகதி தனது வீட்டில் மூர்ச்சையுற்று விழுந்திருந்த போது மதுபோதையில் வீட்டுக்குள் நுழைந்த இந்நபர் இப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். முர்ச்சை தெளிந்து பார்த்த போது சந்தேக நபர் தலைமறைவாகி விட்டதாகவும் அப்பெண் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=5231 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE