இந்த தாக்குதலுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவும் பொறுப்புக்கூறவேண்டும் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தாக்குதல்களை நடத்துவோரையும் கொலைகளை செய்வோரையும் தங்களுடன் வைத்துக்கொண்டு நீதிநெறிமுறைகள் பற்றி கதைப்பதையிட்டு அரசாங்கம் வெட்கப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஏற்பட்ட சூறாவளி மற்றும் சீரற்ற காலநிலைக் காரணமாக உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பலப்பிட்டிக்கு நேற்று மாலை விஜயம் மேற்கொண்டிருந்த போது அவரது வாகன தொடரணியின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/70603-2013-06-12-14-46-01.html#sthash.GoZQbXyw.dpuf )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.