......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 21 July 2013

கூட்டமைப்புக்குள் போட்டி பிளவு ஏற்படுவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை: மனம் திறக்கிறார் மாவை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் ஒன்றுபட்டு நிற்கின்றோம் என்பதை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். எங்கள் தலைமையின் முடிவை நாங்கள் பூரணமாக வரவேற்பவர்கள். ஆற்றலும் ஆளுமையும் அனுபவமும் கொண்ட நீதியரசர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். அவரின் வெற்றிக்குப் பின்னால் நாம் நிற்போம்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உச்சி மாநாட்டின் பின் 13ஆவது சட்டத்தில் திருத்தம் - அரச உயர் மட்ட தலைவர்கள் தெரிவிப்பு

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உச்சி மாநாடு முடிவடைந்த பின்னர் 13ஆவது திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு பொலிஸ் காணி அதிகாரங்கள் நீக்கப்படவுள்ளதாக அரச உயர் மட்டத்தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

நீதவானிடம் போலி நாணயத்தாள்

அதிவேக  நெடுஞ்சாலையின் கொட்டாவ நுழைவாயிலில் நீதவான் ஒருவர் வழங்கிய 1000 ரூபா நோட்டு போலியானதென தெரியவந்துள்ளது.

நாட்டு மக்கள் ஒன்றிணையும் காலம் ஏற்பட்டுள்ளது: ஜனாதிபதி

-எம்.சி.அன்சார்

'அனைத்து இனங்களுக்கும், மதங்களுக்கும் மதிப்பளித்து நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டிய காலம் உருவாகியுள்ளது' என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வுக்காக போட்டியிடுகின்றேன்: தயா மாஸ்டர்

-எஸ்.கே.பிரசாத்

'போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியின் சார்பில் நான் போட்டியிடுகின்றேன்' என்று விடுதலை புலிகளின் முன்னாள் ஊடக பேச்சாளரும் வட மாகாணத்துக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளருமாகிய தயா மாஸ்டர் தெரிவித்தார்.

நான் மன்னிப்பு கேட்கமாட்டேன்: டிக்கிரி

-எஸ்.தியாகு

வைத்தியர்களுக்கு எதிராக நான் எவ்விதமான தகாத வார்த்தைகளையும் பிரயோகிக்கவில்லை என்று தெரிவித்த மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ இது தொடர்பில் தாம் மன்னிப்பு கோர போவதில்லை என்றும் தெரிவித்தார்.

13 பிளஸ் பற்றி தெரியுமா?: த.தே.கூவிடம் ரெமீடியஸ்

-சுமித்தி தங்கராசா

'மாவட்ட ஆட்சி போதுமென்றவர்கள் மாகாணசபை மட்டும் போதாது 13 பிளஸ் வேண்டும் என்கின்றார்கள்' 13 பிளஸில்  என்ன இருக்கின்றது என்பது தெரியுமா? என கேள்வி எழுப்பியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மாநகரசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான முடியப்பு ரெமீடியஸ் பகிரங்க விவாதத்திற்கு வருமாறும் அழைப்புவிடுத்துள்ளார்.

மத்திய மாகாணத்தில் 40 வைத்தியசாலைகளின் பணிகள் ஸ்தம்பிதம்

-எஸ்.தியாகு

மத்திய மாகாணத்தைச்சேர்ந்த வைத்தியர்கள் இன்று மேற்கொண்ட அடையாள வேலைநிறுத்த போராட்டத்தினால் 40 வைத்தியசாலைகளின் பணிகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தன. இதனால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்தனர்.  

ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்களை அழைக்கவும்: பவ்ரல்

-டியன் சில்வா 
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து தேர்தல் கண்காணிப்பாளர்களை கொண்டுவருமாறு தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

Wednesday, 17 July 2013

அருந்திக சொல்வது பொய்: ஹந்துநெத்தி

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோவின் விசர் கதைகளுக்கு தான் பதிலளிக்கத் தேவையில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.

Tuesday, 16 July 2013

53 புதிய பரிந்துரைகளை அமுல்படுத்த அமைச்சுக்களுக்கு அறிவுறுத்தல்

* வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகள்
* மனித உரிமைகள் * மனிதாபிமான சட்டங்கள் உட்பட
நல்லிணக்க ஆணைக்குழு

மாவட்ட செயலாளர்களுடன் தேர்தல் ஆணையாளர் இன்று சந்திப்பு

எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் தேர்தல் நடை­பெ­ற­வுள்ள வடக்கு, வடமேல் மற்றும் மத்­திய மாகா­ணங்­களில் உள்ள அனைத்து மாவட்­டங்­க­ளி­னதும் செய­லா­ளர்­களை தேர்­தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய இன்று செவ்­வாய்க்­கி­ழமை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.

13 ஆவது திருத்தம் பூரணமற்ற சட்டம்: விக்னேஸ்வரன்

13 ஆவது திருத்தம் பூரணமற்ற சட்டமெனக் கூறிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்னேஸ்வரன் இந்த குறைப்பாடுகளை நீக்குவதற்கு தான் அரசாங்கத்துடன் பேசவுள்ளதாக கூறினார்.

முதலமைச்சர் வேட்பாளராக சுவாமிநாதன்?

-யொஹான் பெரேரா 
ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான டி.எம்.சுவாமிநாதன் வட மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஷிராணி தொடர்பான 5 மனுக்களையும் ஆராய முடிவு

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தொடர்பான ஐந்து மனுக்களையும் ஐந்து நீதியரசர்கள் குழு முன்னிலையில் ஆராய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. உரிமை மீறல் மனுக்கள் நான்கு மற்றும் மேன்முறையீட்டு மனுவொன்றே இவ்வாறு ஆராயப்படவிருக்கின்றது.

புலிக்கொடியுடன் ஓடியவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

-பாரூக் தாஜுதின்
ஐக்கிய இராஜியத்தில் கார்டிஃப் நகர மைதானத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடியவருவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சைகை மொழியில் தேசிய கீதம்

சமூக ஒருமைப்பாட்டு வாரத்தை முன்னிட்டு நேற்று நடத்தப்பட்ட ஆரம்ப விழாவில் மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் சைகை மொழியில் தேசிய கீதத்தை இசைத்தனர்.

Sunday, 14 July 2013

6,000 மாத்திரைகளுடன் பாக்.பிரஜை கைது

6,000 மாத்திரைகளுடன் பாகிஸ்தான பிரஜையொருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

Sunday, 30 June 2013

இனத்துக்கொரு சட்ட அமுலாக்கமா?: ஆயர் சுவாமிப்பிள்ளை

-எஸ்.கீதபொன்கலன்

'நாட்டின் சட்ட அமுலாக்கல் நடைமுறை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இனத்திற்கொரு சட்ட அமுலாக்கல் நடைமுறை தற்போது கையாளப்படுகின்றதா என்ற சந்தேகம் வேகமாக பொது மக்கள் மத்தியில் ஏற்பட்டு வருகின்றது' என்று திருகோணமலை கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் அதிவண.அருட்கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை கூறினார்.

சம்பிக்கவின் அணு சக்திப் பொறுப்பு வாபஸ்

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிற்கு ஒப்படைக்கப்பட்டிருந்த அணு சக்திப் பொறுப்பு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இந்த பொறுப்பு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ADD TEXT HERE