......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 21 July 2013

நான் மன்னிப்பு கேட்கமாட்டேன்: டிக்கிரி

-எஸ்.தியாகு

வைத்தியர்களுக்கு எதிராக நான் எவ்விதமான தகாத வார்த்தைகளையும் பிரயோகிக்கவில்லை என்று தெரிவித்த மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ இது தொடர்பில் தாம் மன்னிப்பு கோர போவதில்லை என்றும் தெரிவித்தார்.

மத்திய மாகாணத்தில் அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்ட நிலையில்,  வைத்தியர்களை தகுந்த காரணமின்றி தகாத வார்த்தைகளை பிரயோகித்தமைக்கு மத்திய மாகாண ஆளுநர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வைத்தியர்கள் சங்கம் அறிவித்துள்ளமை குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

வைத்தியர்களுககு எதிராக நான் எவ்விதமாக தகாத வார்த்தைகளையும் பிரயோகிக்கவில்லை. இந்திலையில் நான் எவ்வாறு மன்னிப்பு கேட்பது. நான் மன்னிப்பு கேட்கமாட்டேன்.

வைத்தியசாலையின் மருந்தக களஞ்சிய சாலையை பார்வையிடவே நான் சென்றேன். அங்கு கூட்டம் நடைபெற்றது. அந்த இடத்திற்கு சென்று வைத்தியர்களுக்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள வாகனங்களை ஏன் இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை என்று கேட்டேனே தவரி வேறொன்றுமே கேட்கவுமில்லை கூறவுமில்லை என்றார்.


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/75655-2013-07-19-12-01-11.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE