-எஸ்.தியாகு
மத்திய மாகாணத்தைச்சேர்ந்த வைத்தியர்கள் இன்று மேற்கொண்ட அடையாள வேலைநிறுத்த போராட்டத்தினால் 40 வைத்தியசாலைகளின் பணிகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தன. இதனால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்தனர்.
பிரதேச வைத்தியசாலைகளும் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகளின் காரியாலய வைத்தியர்களுமே இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரிகளின் காரியாலயத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்ட மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ வைத்தியர்களுக்கு எதிராக தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்த 24 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ் வேலைநிறுத்தத்தில் மத்திய மாகாண பிரதேச வைத்தியசாலைகள் 40 உம் சுகாதார வைத்திய அதிகாரிகளின் காரியாலய வைத்தியர்கள் 500 பேரும் குதித்துள்ளனர்.
இதனால் குறித்த வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவு சத்திர சிகிச்சை வைத்திய பரிசோதனை முகாம் (கிளினிக்) ஆகியன முற்றாக செயலிழந்திருந்ததோடு இங்கு சேவைகளை பெற்றுக் கொள்ள வருகை தந்த நோயாளர்கள் திரும்பி சென்றதை காணக்கூடியதாக இருந்தது.
வைத்தியர்களை தகுந்த காரணமின்றி தகாத வார்த்தைகளை பிரயோகித்தமைக்கு மத்திய மாகாண ஆளுநர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வைத்தியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இல்லாவிட்டால் இந்த வேலைநிறுத்த போராட்டத்தை விஸ்தரிக்கவேண்டிய நிலை ஏற்படும் என்றும் வைத்தியர்கள் சங்கம் எச்சரித்துள்ளனர்.
இந்த அடையாள வேலைநிறுத்தத்தை இன்று மாலையுடன் முடிவிற்கு கொண்டுவர தாம் தீர்மானித்திருப்பதாக அரச வைத்தியர்கள் சங்;கத்தின் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் செயலாளர் எஸ்.டீ.எல்.கீகனகே எழுத்து மூலமாக தமக்கு அறிவித்திருப்பதாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/75645--40-.html )

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.