......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 16 July 2013

ஷிராணி தொடர்பான 5 மனுக்களையும் ஆராய முடிவு

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தொடர்பான ஐந்து மனுக்களையும் ஐந்து நீதியரசர்கள் குழு முன்னிலையில் ஆராய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. உரிமை மீறல் மனுக்கள் நான்கு மற்றும் மேன்முறையீட்டு மனுவொன்றே இவ்வாறு ஆராயப்படவிருக்கின்றது.
நீதியரசர்களான சலீம் மர்சூக், சந்திரா ஏக்கநாயக்க,சந்தியா ஹெட்டிகே, ஈவா வணசுந்தர மற்றும் ரோஹினி மாரசிங்க ஆகியோர் கொண்ட குழாம் முன்னிலையிலேயே ஆராயப்படவிருக்கின்றது. முன்னாள் நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப்பிரேரணையை விசாரணைக்கு உட்படுத்திய நாடாளுமன்ற தெரிவுக்குழு சட்டவிரோதமானது என் கோரியும், அந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்த நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 78(அ) சட்டத்திற்கு விரோதமானது என்பதனால் நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்கும் அதிகாரத்தை சூன்யப்படுத்துமாறு கோரியே உரிமைமீறல் மனுக்கள் நான்கு தாக்கல் செய்யப்பட்டன. அத்துடன், முன்னாள் நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தீர்மானத்தை இரத்துசெய்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட ரீட் கட்டளையை இரத்துசெய்யக்கோரி சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு ஆகியனவே ஆராயப்படவுள்ளன. -


(மூலம்:  http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/75111--5-.html#sthash.GXJTQquW.dpuf )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE