......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 16 July 2013

மாவட்ட செயலாளர்களுடன் தேர்தல் ஆணையாளர் இன்று சந்திப்பு

எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் தேர்தல் நடை­பெ­ற­வுள்ள வடக்கு, வடமேல் மற்றும் மத்­திய மாகா­ணங்­களில் உள்ள அனைத்து மாவட்­டங்­க­ளி­னதும் செய­லா­ளர்­களை தேர்­தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய இன்று செவ்­வாய்க்­கி­ழமை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.

செப்­டெம்பர் மாதம் நடை­பெ­ற­வுள்ள தேர்­த­லுக்­கான மாவட்­ட ரீதி­யான ஏற்­பா­டுகள் மற்றும் அவை தொடர்­பான செயற்­பா­டுகள் தொடர்பில் இந்த சந்­திப்­பின்­போது விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளது.
மேலும், மாவட்­ட ரீதியில் நாளை மறுதினம் 18 ஆம் திகதி முதல் இயங்­க­வுள்ள முறைப்­பாட்டு அலு­வ­ல­கங்கள் குறித்தும் அர­சியல் கட்­சிகள் மற்றும் வாக்­கா­ளர்­க­ளிடம் இருந்து முறைப்­பா­டு­களை பெறு­வது குறித்தம் தேர்தல் ஆணை­யா­ளரும் மாவட்ட செய­லா­ளர்­களும் ஆரா­ய­வுள்­ளனர்.
வட மாகா­ணத்தில் யாழ்ப்­பாணம் கிளி­நொச்சி, வவு­னியா, முல்­லைத்­தீவு, மன்னார் ஆகிய மாவட்ட செய­லா­ளர்­களும் வடமேல் மாகா­ணத்தின் புத்­தளம் மற்றும் குரு­ணாகல் மாவட்ட செய­லா­ளர்­களும் மத்­திய மாகா­ணத்தின் நுவ­ரெ­லியா, கண்டி மற்றும் மாத்­தளை மாவட்ட செய­லா­ளர்­களும் தேர்தல் ஆணை­யா­ள­ரு­ட­னான சந்­திப்பில் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.
வடக்கு, வடமேல் மற்றும் மத்­திய மாகாண சபை­க­ளுக்கு மொத்­த­மாக 142 உறுப்­பி­னர்­களை தெரிவுசெய்யும் நோக்கில் 43 இலட்­சத்து 58 ஆயி­ரத்து 261 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதிபெற்­றுள்­ளனர். தேர்தல் செப்­டெம்பர் மாதம் 21 அல்­லது 28 ஆம் திகதி 2012 ஆம் ஆண்­டுக்­கான வாக்­காளர் இடாப்பின் பிர­காரம் நடை­பெ­ற­வுள்­ளது.
மூன்று மாகாண சபை­க­ளுக்­கு­மான வேட்பு மனுக்­களை இம்­மாதம் 25 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் முதலாம் திக­தி­வரை தாக்கல் செய்­யலாம். சுயேச்சைக் குழுக்களுக்கான கட்டுப்பணங்களை இம்மாதம் 31 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு முதல் செலுத்தவேண்டும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.


(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=5908 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE