......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 14 July 2013

6,000 மாத்திரைகளுடன் பாக்.பிரஜை கைது

6,000 மாத்திரைகளுடன் பாகிஸ்தான பிரஜையொருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்திரைகளை பயணப்பொதியில் மறைத்து வைத்து கொண்டுவந்தபோதே சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் மாத்திரைகளை மீட்டுள்ளதுடன் அவரையும் கைது செய்துள்ளனர்.

மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான இந்த மாத்திரைகள் மன நோயாளிகள் சிகிச்சை பயன்படுத்தப்படுகின்ற மாத்திரைகளாகும். எனினும், அந்த மாத்திரைகள் மாணவர்கள் பயன்படுத்துவதாக   வதந்தி நிலவுகிறது.

ஓமன் ஏர்வேஸ் விமானத்தில் மஸ்கட்டிலிருந்து இன்று காலை வந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/74951-6000---.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE