......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 21 July 2013

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உச்சி மாநாட்டின் பின் 13ஆவது சட்டத்தில் திருத்தம் - அரச உயர் மட்ட தலைவர்கள் தெரிவிப்பு

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உச்சி மாநாடு முடிவடைந்த பின்னர் 13ஆவது திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு பொலிஸ் காணி அதிகாரங்கள் நீக்கப்படவுள்ளதாக அரச உயர் மட்டத்தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

மாகாண சபைகளுக்கு 13ஆவது அரசியலமைப்பு திருத்தங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மறுபரிசீலனை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகிய முக்கிய எதிர்க்கட்சிகள் பிரதி நிதிகளை நியமிக்காத காரணத்தால் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் அரச கட்சிகளின் பிரதி நிதிகள் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நீக்குவதற்கு தன்னிச்சையாக முடிவு எடுக்கக் கூடியதாகவிருக்கும்

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் எடுக்கும் முடிவுகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.


(மூலம்:http://www.virakesari.lk/article/local.php?vid=6027 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE