......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 17 July 2013

அருந்திக சொல்வது பொய்: ஹந்துநெத்தி

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோவின் விசர் கதைகளுக்கு தான் பதிலளிக்கத் தேவையில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.

எனினும் நீதிமன்றமொன்றினால் அழைக்கப்பட்டால் தான் வாக்குமூலம் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்த விடயங்களை சுனில் ஹந்துநெத்தி மறுத்தார். தனது பெயரை இந்த சர்ச்சைக்குள் இழுப்பது ஒரு பெரிய சதியின் பகுதியாக இருக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.

"எனது பெயர் ஏன் இதற்குள் இழுக்கப்பட்டது என விளங்கவில்லை. இது ஒரு பெரிய சதியின் தொடக்கமாக தெரிகிறதையிட்டு ஆராய வேண்டும்' என சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார். 

காணாமல் போயுள்ள பிரகீத் எக்னெலியகொட பற்றி அருந்திக்க பெர்னாண்டோ பல விடயங்களை கூறியுள்ளார். இப்போது எனது பெயர் இழுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

"பிரகீத் எக்கெலிகொட பெல்ஜியத்தில் வாழ்வதாக நான் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் பெர்னாண்டோ கூறியிருப்பது ஊடகவியலாளருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மறைக்க அரசாங்கம் எடுக்கும் ஒரு முயற்சியாகும்" அவர் தெரிவித்தார். 


(மூலம்: http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/75351-2013-07-17-07-19-05.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE