......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 17 July 2013

தனிநபர் பிரேரணைக்கு தடை விதித்து பெண்களின் உரிமைகளை பறித்துள்ளது அரசாங்கம்: ரோசி

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டுமென மேடைகளில் முழங்கும் ‘அரசாங்கம்’ மறுபுறம் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் தான் கொண்டு வந்த தனிநபர் பிரேரணைக்கு தடை விதித்து பெண்களின் உரிமைகளை பறித்துள்ளது எனக் குற்றம் சாட்டும் ஐ.தே. கட்சி எம்.பி. ரோசி சேனாநாயக்க, தெற்காசியாவில் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்த நாடு இலங்கையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

ராஜகிரியவிலுள்ள தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க மண்டபத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ரோசி சேனநாயக்க எம்.பி.இதனைத் தெரிவித்தார்.
இங்கு ரோசி சேனநாயக்க எம்.பி. மேலும் உரையாற்றுகையில்,
கடந்த 10ஆம் திகதி பெண்களின் அபிவிருத்தி தொடர்பான வலைப்பின்னல் ஏற்பாடு செய்த செயலமர்வு சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இதில் பிரதமர், மகளிர் விவகார அமைச்சர், எதிர்க் கட்சித் தலைவர் உட்பட அமைச்சர்கள், எம்.பி.க்கள் பலர் கலந்துகொண்டு அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார்கள்.
ஆனால் அடுத்த நாள் 11ஆம் திகதி பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்ட அரசியலில் பெண்களின் பிரதிநித்துவத்தை அதிகரிக்கப்பட வேண்டுமென்ற எனது தனிநபர் பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்வைக்க விடாது அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் சட்டப் பிரச்சினையொன்று முன்வைக்கப்பட்டு தடுக்கப்பட்டது.
இவ்வாறு தனி நபர் பிரேரணை கொண்டு வரப்படும் போது சட்டமா அதிபரின் அங்கீகாரம் தேவையென்றும் அமைச்சர் தினேஷ் குணவர்தன வாதத்தை முன்வைத்தார்.
ஆனால் அண்மையில் பாராளுமன்ற உறுப்பினரான அதுரலியே ரத்ன தேரர் உட்பட பல அரச தரப்பினர் தனிநபர் பிரேரணைகளை கொண்டு வந்தனர். ஆனால் அதன்போது சட்டமா அதிபரின் அங்கீகாரம் கோரப்படவில்லை.
எனவே அரசாங்கம் வேண்டுமென்றே எனது தனிநபர் பிரேரணையை தடுத்து நிறுத்தியுள்ளது. இதன் மூலம் பெண்களின் உரிமைகளை வழங்குவதை அரசாங்கம் தடுத்துள்ளது. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
தெற்காசியா
இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், மாலைதீவு என தெற்காசிய நாடுகளின் பெண்களுக்கு அரசியலில் 30வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் முதன் முதலாக வாக்குரிமை கிடைத்த இலங்கையில் பெண்களுக்கு 7 வீதத்திற்கும் குறைவாகவே ஒதுக்கப்படுகிறது.
வடக்கு
வடக்கில் 89,000 விதவைகள் இருக்கின்றனர். பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்கள், பிள்ளைகள் போஷாக்கின்மையால் வாழ்கின்றனர்.
ஆனால் அரசாங்கம் இவர்களை வாழ வைப்பதற்கு எதுவிதமான திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை.

இவ்வாறு அனைத்து வழிகளிலும் பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படாது பறிக்கப்படுகின்றது என்றும் ரோசி சேனாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.


(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=5927 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE