அரச தாதியர்கள் சங்கம் இன்று முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு தோல்வியடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச தாதியர்கள் சங்கம் சில நிபந்தனைகளை முன்வைத்து இன்று 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளது .
எனினும் இப் பகிஷ்கரிப்பு தோல்வியென சுகாதார அமைச்சு தெரிவித்த்துள்ளது.
நாட்டில் உள்ள அரச வைத்தியசாலைகள் பலவற்றில் தாதியர்கள் இன்றைய வருகை 90 வீதமாக இருந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தாதியர்களின் வருகை தொடர்பில் வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் தங்களுக்கு அறிவித்தாகவும் இதனால் நாளாந்த வைத்தியசாலை பணிகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லையெனவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் அரச தாதியர்கள் சங்கம் இதனை மறுத்துள்ளதுடன் பல தாதியர்கள் இன்று கடமைக்கு செல்லவில்லையெனவும் அறிவித்துள்ளது.(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=5940 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.