காதலியிடமிருந்து 16 இலட்சம் ரூபா மற்றும் 54 பவுண் நகைகளை ஏமாற்றிய காதலனை எதிர்வரும் 23 ஆம் திகதிவரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
ஏமாற்றியதாக கூறப்படும் காதலனான கிஷான் பீரிஸ் என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
12 வயதிலிருந்து தான் அவருக்கு காதலியாக இருப்பதாகவும் நியூஸிலாந்து விஸாவை பெற்று அங்கு சென்று வாழ்வோம் எனக்கூறியே தன்னிடமிருந்து பணத்தையும் நகைகளையும் பெற்றுச்சென்றதாக மொறட்டுவையைச்சேர்ந்த யுவதி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
அவருடன் காதல்வயப்பட்டது மட்டுமன்றி தான் கர்ப்பிணியாக இருப்பதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது காதலனுக்கு நிலையான வருமானம் இல்லையென்றும். அவர் இரண்டு குழந்தைகளின் தந்தை என்பதனை பின்னரே அறிந்துகொண்டதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/75435-2013-07-17-16-01-47.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.