பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சியாம் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏனைய சந்
தேகநபர்கள் ஆறு பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவை அடைத்துவைத்திருக்கும் கூண்டுக்குள் இந்த ஆறு சந்தேகநபர்களையும் அடைக்கவேண்டாம் என்றும் நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பொலிஸார் நால்வர் உட்பட அறுவரே இவ்வாறு 19 ஆம் திகதிவரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் சஹாப்தீன் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் அறுவருக்கும் விசேட பாதுகாப்பை வழங்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரிவினரை அழைத்த நீதவான், சந்தேகநபர்களில் பொலிஸார் நால்வரில் பொலிஸ் கோப்ரலான பிரியந்த சஞ்ஜீவையை தவிர ஏனையவர்கள் இரகசிய வாக்குமூலமளிப்பதற்கு விரும்பினால் அடுத்த தவணையின்போது தனது கவனத்திற்கு கொண்டுவருமாறும் நீதவான் பணித்துள்ளார்.
பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சியாம் படுகொலை தொடர்பான வழக்கு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் கடந்த 9 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் விளக்கமறியல்; நாளை 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலையுடன் தொடர்புடையதாக கூறப்படும் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன கடந்த மாதம் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
கடத்திசெல்லப்பட்ட வர்த்தகரான மொஹமட் சியாம் தொம்பே பிரதேசத்தில் வைத்து கடந்த 22 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/75455--6-.html )

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.