......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 28 December 2017

மின்சாரத்தை சிக்கனப்படுத்த மிக எளிமையான வழிமுறைகள் – நீங்களும் பயனடையுங்கள்!!

மின்சாரத்தை மிச்சப்படுத்துவது மிகப்பெரிய கடமையாகும். அதற்கான சில ஆலோசனைகள்.
மின் விளக்கு அமைப்புகள்:

Thursday, 13 October 2016

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? – கட்டுரை

தற்போது தேர்வுகாலம், பல்வேறு போட்டி தேர்வுகள், அரசு நடத்தும் 10 ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் மாணவ மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. இந்த சூழ் நிலையில் நாம் நுழைவு தேர்வுகளிலும், அரசு பொது தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான் நாம் நினைக்கும் படிப்பை குறைவான செலவில் படித்து நாம் நினைத்த வேலைக்கு போக முடியும். இந்தியாவை பொருத்தவரை நாம் எடுக்கும் மதிப்பெண் தான் நம்முடைய அறிவு திறனை தீர்மானிப்பதாக இருக்கின்றது. எனவே நாம் கல்வி துறையில் முன்னேற அதிகமாக மதிப்பெண் எடுப்பது கட்டாயமாகின்றது.

Saturday, 9 January 2016

nintavur / உங்கள் நேரம் நல்ல நேரமா?

“எல்லாம் என் நேரம்” என்று நொந்து கொள்ளுபவர்களா? நீங்கள். அப்படியெனில் கட்டாயம் இதைப் படியுங்கள். அப்படிபட்டவர் இல்லையென்றாலும் படியுங்கள்!

Thursday, 7 January 2016

வேலை பளுவின்றி சம்பாதிக்க சில பணிகள்!

தலைப்பை படித்ததும், கடின உழைப்பின் மூலம் மட்டுமே தங்களது வாழ்க்கை தரத்தை முன்னேற்றிக்கொண்ட காலம் மலையேறிவிட்டதோ? என்று எண்ணத் தோன்றலாம்!

Tuesday, 5 January 2016

nintavur / மலேசியாவில் உயர்கல்வி எளிது!

உயர்கல்வி கற்பதற்கு ஆசியாவின் சிறந்த நாடுகளில் ஒன்றாக மலேசியா உருவெடுத்து வருகிறது. அளவான செலவும், ஏறத்தாழ இந்தியாவை ஒத்த வாழ்க்கை முறையும், உயர்ந்த கல்வித் தரமும் இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கலாம்!

Friday, 1 January 2016

nintavur / திட்டமிட்டுச் செயலாற்றுவது எப்படி?

திட்டமிடுதலே பாதி வெற்றி என்பார்கள். திட்டமிட்டு யாரும் தோற்றுப் போவதில்லை... திட்டமிடுவதில்தான் தோற்றுப் போகிறோம். திட்டமிடுவதில் தோற்றுப் போவது என்பது தோற்றுப் போவதற்கே திட்டமிடுவதைப் போன்றது!

Thursday, 31 December 2015

nintavur / இளமையில் வளமை; முதுமையில் இனிமை!

இளமைப் பருவம் வாழ்க்கையின் வசந்தம்... இளமையில் நீங்கள் எப்படி உங்களை  வளப்படுத்தி கொள்கின்றீர்களோ, அவ்வாறே உங்களின் எதிர்காலம் அமையும்!

Tuesday, 29 December 2015

NINTAVUR / பஞ்சமில்லா பணிவாய்ப்புக்கு விருந்தோம்பல் துறை!

பாரம்பரியமிக்க வரலாறு, புராதான நிகழ்வுகள், விதவிதமான பழக்க வழக்கங்கள், பல்வேறு தட்பவெப்ப நிலைகள், அசத்தும் இயற்கை ரம்மியங்கள் எல்லையெங்கும் பரவியுள்ள இந்தியாவில், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை குறிப்பிடத்தக்க துறைகளில் ஒன்றாக உயர்ந்துள்ளது. இதன்மூலம், பல்வேறு விதமான வேலை வாய்ப்புகளை வாரி வழங்கும் துறையாகவும் உருவடுத்து வருவது இளைஞர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

Wednesday, 25 November 2015

nintavur / தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து!

தேர்வு ஜுரம் என்பது சுமாராகப் படிக்கும் மாணவர்களுக்குத்தான் என்றில்லை... மிக நன்றாகப் படிக்கும் மாணவர் களுக்குக்கூட வந்துவிடுகிறது. கேள்வித்தாள் சுலபமாக இருக்குமா, படித்த பாடத்தி லிருந்து கேள்விகள் வருமா எனத் தேவை யற்ற பயம் ஏற்படும். சரியாகப் படிக்காத மாணவர்களுக்கு ‘பாஸ் செய்துவிட முடி யுமா?’ என்று பயம்; சராசரி மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண் எடுக்க முடியுமா என்று பயம்;

Monday, 23 November 2015

nintavur / சுலபமாக மனப்பாடம் செய்வது எப்படி?

பாடங்களைப் புரிந்துகொண்டு படிக்க வேண்டியது அவசியம். அதே சமயம், சில பாடங்களில் மனப்பாடத்துக்கும் பெரிதும் முக்கியத்துவம் உண்டு. குறிப்பாக, மொழிப்பாடங்களில் மனப்பாடப் பகுதிகளை வரி பிசகாமல், தவறு இல்லாமல் எழுதினால்தான் முழுமையான மதிப்பெண்கள் கிடைக்கும். கணித சூத்திரங்கள், அறிவியல் ஃபார்முலாக்கள், வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள் நடந்த வருடங்கள் போன்றவையும் மனப்பாடம் செய்ய வேண்டியவையே.

மனப்பாடம் செய்வதற்கு இதோ சில டிப்ஸ்...

ஒரு பாடத்தை ஒரே நேரத்தில் மொத்தமாகப் படிக்கும்போது, அனைத்தையும் நினைவில் வைத்துக்கொள்வது சிரமமாக இருக்கும். எனவே, வினா விடைகளை மட்டும் தனியே எடுத்து வைத்துக்கொண்டு படிப்பது நல்லது. ஒரே நேரத்தில் படித்து, வரி பிசகாமல் சொல்லிவிட்டா லும், இரண்டொரு நாளில் மறந்துவிடும் சாத்தியம் உண்டு. எனவே, படித்த பாடம் மறக்காமல் இருக்க, அதை அவ்வப்போது மீண்டும் மீண்டும் எடுத்துப் படிப்பதே சிறந்த வழி!

சிறிய செய்யுள் அல்லது சிறிய விடைகளை ஒரே மூச்சில் படித்து முடித்துவிடலாம். பெரிய செய்யு ளையோ, பெரிய விடையையோ கொஞ்சம் கொஞ்சமாகப் படித்தால்தான் நினைவில் வைத்துக்கொள்ள முடியும். பெரிய விடை-களை முதலில் பகுதி பகுதியாகப் படித்து-விட்டு, பின்னர் முழுமையாகப் படித்தால் நன்கு மனப்பாடம் ஆகும்.

நாம் படித்ததை நாமே மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்க்க வேண்டும். எங்கெங்கே திணறுகிறதோ அந்தப் பகுதிகளை மீண்டும் படித்து ஒப்பித்துப் பயிற்சி செய்யலாம். அவ்வப்போது எழுதிப் பார்த்தும் பயிற்சி செய்-தால், விடைகள் நன்கு மனதில் பதிவ-துடன், தேர்வில் மளமளவென்று எழுதி முடிக்க முடியும்.

நாம் படிக்கும் பாடங்களில் உள்ள விஷயங்-களுக்குத் தொடர்புடைய பொரு-ளையோ அல்லது எண்களையோ நினைவில் வைத்துக்கொள்வது ஒரு நல்ல முறை.

உதாரணத்துக்கு, வானவில்லின் நிறங்களை நினைவில் வைத்துக்கொள்ள VIBGYOR என்கிற வார்த்தையை நினைவில் வைத்துக்கொண்டாலே போதும்... வானவில்லின் நிறங்களை சட்டென்று நினைவுக்குக் கொண்டுவந்து விடலாம்.




(மூலம்: e)

Friday, 20 November 2015

nintavur / பெற்றோரின் அக்கறை எதில் இருக்க வேண்டும்?

“Education is the basic importance in the planned development of a nation” - First Five Year Plan

“Education is the most crucial investment in human development. Education influences improvement in health, hygiene, demographic profile, productivity and all that is connected with the quality of life.” - The Ninth Five Year Plan

ஐந்தாண்டு திட்டங்களில் கல்விக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் அதிகரித்துள்ளதைப் போலவே பெற்றோரின் மனநிலையிலும் மிகப் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Thursday, 12 November 2015

nintavur / மாணவர்களுக்கு அருள்வாக்கு

மனத்தில் அன்பும் சந்தோஷமும் இருக்கிற
போது தான் புத்தி தெளிவாக இருக்கிறது.
புத்தி வெளிவாக இருக்கிறபோது படித்தால்
பாடம் நன்றாக ஏறுகிறது.

Wednesday, 11 November 2015

Sunday, 8 November 2015

nintavur / நல்ல புத்தகம் ஒரு சிறந்த நண்பன்

சில பக்கங்களைப் படிக்கிறோம். ஆனால் படித்த பிறகு என்ன படித்தோம் என்று நினைவுக்கு வருவதில்லை. காரணம் மனம் அதில் ஈடுபடாமல் இருப்பதால், கிரகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் குறிப்புகள் எடுப்பது சிறந்தது.

Friday, 6 November 2015

nintavur / பரீட்சையில் தோல்வியா? கவலையை விடுங்கள்.. வாழ்க்கையில் ஜெயிக்கலாம்!

பெற்றோர்களும், மாணவ-மாணவிகளும் மன நெருக்கடிக்கு உள்ளாகி, நிம்மதியை இழக்கிற காலகட்டம் இது! விதைத்து பயிர் வளர்த்த விவசாயிகள் அறுவடைக்கு காத்திருப்பது போன்று, பரீட்சை எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுக்கு காத்திருக்கிறார்கள்.

Wednesday, 4 November 2015

nintavur / தேர்வறையில் நேர மேலாண்மை

தேர்வறை பெரும்பாலானவர்களுக்கு பதட்டம் தரும் இடமாக இருக்கிறது. தேர்வுக்காக சரியாக தயாராகாதவர்கள் மட்டுமல்லாது நன்றாக தயார் செய்து வந்தவர்கள் கூட தேர்வறைக்குள் நுழைந்ததும் தடுமாற்றம் அடைவது உண்டு.

Wednesday, 26 June 2013

'பரீட்சைக்கு முன் கருத்தரங்குக்கு தடை'

பொது பரீட்சைகள் நடைபெறுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னரும் அந்த பரீட்சைகள் நிறைவடையும் வரையிலும் கருத்தரங்குகள் மற்றும் மேலதிக வகுப்புகள் நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Tuesday, 25 June 2013

பல்கலை மாணவர்களுக்கு மனநல சோதனை

பல்கலைக்கழகங்களுக்கு எதிர்காலங்களில் உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் மனநலத்தை சோதனைக்கு உட்படுத்துவதற்கு உயர் கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

Thursday, 20 June 2013

திறந்த பல்கலைகக்கழக சட்டபீடத்தின் தலைவி யசோதராவுக்கு கத்திக்குத்து

தீவிர சத்திரசிகிச்சை; உயிராபத்தில்லை; நாவல பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றம்
 
நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவமொன்றில் பல்கலைக்கழக சட்டபீடத் தலைவி யசோதரா கதிர்காமத்தம்பி பலத்த காயங்களுக்குள்ளாகி சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று நண்பகல் பல்கலைக்கழகத்தின் சட்டபீடப் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

Saturday, 15 June 2013

தென்கிழக்கு பல்கலைக்கழகம் பற்றி ஊடகங்களில் தவறான செய்தி – உபவேந்தர் இஸ்மாயில் கவலை

- அஸ்லம் எஸ்.மௌலானா -
SEUSL-8-6 (2)தென்கிழக்கு பல்கலைக்கழகம் பற்றி சில ஊடகங்கள் தவறான விமர்சனங்களை வெளியிட்டு வருவதானது எமக்கு மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.
ADD TEXT HERE