......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 8 December 2012

வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கை

(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வர்த்தக நிலையங்களில் இன்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது காலவதியான மற்றும் சுட்டிகள் (லேபிள்கள்) இடப்படாமல் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதோடு, அவற்றினை விற்பனைக்காக வைத்திருந்த வர்த்தக நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. 

அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள் ஒன்றிணைந்து இந்த திடீர் பரிசோதனை நடவடிக்கையினை மேற்கொண்டன.

கல்முனைப் பிராந்தியத்துக்கான மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பி. பேரம்பலம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி பரிசோதனை நடவடிக்கையில், அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களைச் சேர்த்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பலர் கலந்து கொண்டனர்.           





(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE