......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 8 December 2012

தெரிவுக்குழுவிலிருந்து எதிர்க் கட்சியினர் வெளியேறியமை ஒரு திட்டமிட்ட செயல்


கே. அசோக்குமார், எம்.எஸ். பாஹிம்
அரச தரப்பு எம்பிக்கள் குற்றச்சாட்டு
குற்றப்பிரேரணை தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட தெரிவுக்குழு முன்னிலையில் விசாரணைக்கு முகம் கொடுக்காமல் பிரதம நீதியரசர் வெளியேறிச் சென்றமை அரசியலமைப்பையே ஏளனத்துக்குள்ளாக்கியுள்ளார்.

இதன் மூலம் பாராளுமன்றத்தின் உயரிய தன்மை தொடர்பில் மக்களுக்குள்ள நம்பிக்கை இல்லாமல் செய்யும் செயல் என்று ஆளும் தரப்பு எம்.பிக்கள் நேற்று தெரிவித்தனர். பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை சமர்ப்பித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று செய்தியாளர் மாநாடொன்றை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடத்தினர்.
தெரிவுக் குழுவிலிருந்து எதிர்க் கட்சி உறுப்பினர்கள் வெளியேறிச் சென்றமை ஒரு திட்டமிட்ட செயல். இருப்பினும் பிரதம நீதியரசரின் குற்றப் பிரேரணை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அமைச்சர்களான ஜோன் செனவிரட்ண, எஸ்.பி. திஸாநாயக்க, காமினி லொக்குகே உட்பட சுமார் 31 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டனர். ுற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் விசாரணைக்கு வரும் போது புடைசூழ ஆரவாரம் செய்து பட்டாசு வெடித்து கையசைத்து, ஆதரவாளர்களின் கோஷத்துடன் புறப்பட்டு வருகிறார். இது பாராளுமன்றத்தின் உயரிய தன்மையை மலினப்படுத்தும் செயல். நாம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு செல்லும் போது அப்படி செல்வதில்லை. நீதிமன்றத்தின் கெளரவத்தை நாம் பேணுகிறோம்.
அமைச்சர் ஜோன் செனவிரட்ண சபாநாயகரின் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போது அதனை மதித்து பிரதம நீதியரசர் வருகை தந்தமைக்காக அவரை பாராட்டுகிறோம். இப்போது அவர் நீதியான விசாரணை நடைபெறவில்லை எனக் கூறி வெளியேறியுள்ளார்.
இதன் மூலம் அரசியலமைப்பின் இறைமையையும், பாராளுமன்றத்தின் உயரிய தன்மையையும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனை அனுமதிக்க முடியாது. பிரதம நீதியரசர் விசாரணைகளில் கலந்து கொள்வதன் மூலம் அவர் மீதான குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என்றால் அதனை நிரூபித்திருக்க முடியும்.
நிலையியற் கட்டளையின் பிரகாரமே தெரிவுக்குழு விசாரணைகளை ஒரு மாதத்துள் நிறைவு செய்து சபாநாயகரிடம் கையளிக்க வேண்டும்.
அதற்கு அப்பால் விசேட தேவைகள் இருப்பின் பாராளுமன்றத்தில் பிரேரணையொன்றை சமர்ப்பித்து தெரிவுக்குழுவின் செயற்பாடு காலத்தை நீடிக்க முடியும். தெரிவுக்குழுவிலிருந்து விலகியதன் மூலம் அதற்கும் சந்தர்ப்பமின்றி செய்துள்ளார்.
எதிரணி உறுப்பினர்களும் இவ்வாறு விலகியுள்ளனர். இது ஒரு திட்டமிட்ட செயலாகும். எவ்வாறிருப்பினும் தெரிவுக்குழு விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார்.
மைச்சர் காமினி லொக்குகே பிரதம நீதியரசருக்கு பாராளுமன்றம் அநீதி இழைப்பதாக கருத்து நிலவுகிறது. அவர் தெரிவுக்குழுவுக்கு சமுகமளிக்காவிட்டால்தான் அது அநீதியாக அமையும். அவர் இன்னும் கூட தெரிவுக்குழுவுக்கு வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றார்.
பிரதம நீதியரசர் மீதான குற்றப் பிரேரணைகள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் குறித்து தமக்கு நம்பிக்கையில்லையெனக் கூறி தெரிவுக்குழுவிலிருந்து விலகுவதாக தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் ஜோன் அமரதுங்க, விஜித ஹேரத், இரா. சம்பந்தன், லக்ஷ்மன் கிரியெல்ல ஆகிய நால்வரும் நேற்று அறிவித்தனர்.
நேற்று நண்பகல் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் விசேட செய்தியாளர் மாநாட்டை நடத்திய போதே இவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.


(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE