பாரபட்சமற்ற விசாரணைக்குழுவொன்று அமைக்கப்படும்வரை தனக்கு எதிரான குற்றப் பிரேரணையின் விசாரணையை ஒத்திவைக்குமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவுக்கு பிரதம நீதியரர் ஷிராணி பண்டாரநாயக்கா தனது சட்டத்தரணிகளூடாக கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
'பாரபட்சமற்ற விசாரணைக்குழு முன்னிலையில் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க தயாராக உள்ளதாக சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் பிரதம நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்' என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.
'இந்த அரசாங்கம் பொதுநலவாய கொள்கைகளை பின்பற்றி பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு சுயாதீனமான குழுவை நியமிக்க வேண்டும்' என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.
'இந்த நடவடிக்கை காரணமாக அரசாங்கத்தை சர்வதேச சமுதாயம் சங்கடமானதொரு நிலையில் வைத்து பார்க்கக்கூடிய நிலைமை ஏற்படும்' என்று ஐ.தே.க எம்.பி ஜோன் அமரதுங்க குறிப்பிட்டார்.
'பொதுநலவாய கூட்டத்தொடர் கொழும்பில் நடைபெறவுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் பொதுநலவாயத்திடம் எப்படி முகங்கொடுக்கப்போகிறது என்பது எனக்கு விளங்கவில்லை' என்றும் ஜோன் அமரதுங்க எம்.பி மேலும் கூறினார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.