......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 8 December 2012

பிரதம நீதியரசரின் வெளிநடப்புக்கான விளக்கம்

பாரபட்சமான விசாரணைக்கு முகங்கொடுக்க விரும்பாமலும் நீதித்துறையின் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டுமென்பதற்காகவும் விசாரணையின் போது பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா வெளியேறியதாக சட்டத்தரணிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
மேற்படி அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க அவசியமான தகவல்களை வழங்கும்படி நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம் நவம்பர் 20இல் கேட்கப்பட்டது. ஆனால் அது ஒரு போதும் தரப்படவில்லை. சாட்சியங்களின் பட்டியலை கேட்டும் தரப்படவில்லை. குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமான ஆவணங்களின் பட்டியலை கேட்டோம். அதுவும் தரப்படவில்லை.  

டிசெம்பர் 6ஆம் திகதி 4 மணியளவில் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஆயிரம் பக்கங்கள் அடங்கிய ஆவணங்களின் தொகுதியொன்றைக் கொடுத்து அடுத்த நாள் 1.30 மணிக்கு முன் இவற்றுக்கு பதிலளிக்க வேண்டுமென கூறியது. 

இதைவிட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் இரு அங்கத்தவர்கள் பிரதம நீதியரசரையும் அவரது சட்டத்தரணிகளையும் அவதூறாகப் பேசியுள்ளனர். குற்றச்சாட்டுக்களை நிறுவ வாய்மொழி விசாரணை நடக்காதென கூறப்பட்டது. இதன்மூலம் குற்றஞ்சாட்டுவோரை குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்பு கிடைக்காது என கூறப்பட்டது. 

இந்த நிலைமையில் பிரதம நீதியரசரின் வழக்குரைஞர்கள் பகிரங்க விசாரணையை கோரினர். அவர்கள் விசாரணை நடவடிக்கையை அவதானிக்க சுயாதீன அமைப்புக்களை அனுமதிக்கவும் கோரினர். ஆனால், இவை எல்லாம் மறுக்கப்பட்டன. 

இந்த காரணங்களினால் பிரதம நீதியரசருக்கும் அவரது வழக்குரைஞர்களுக்கும் தெரிவுக்குழுவின் விசாரணையிலிருந்து விலகுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. 

இருப்பினும் வேறு பொதுநலவாய நாடுகளில் செய்யப்படுவது போல பாரபட்சமற்ற, சட்டபூர்வமான ஒரு விசாரணைக்கு முகங்கொடுக்க தான் தயாராக உள்ளதாக பிரதம நீதியரசர் கூறியுள்ளார்' என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE