......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 28 November 2012

ஐ.தே.க. மாநாட்டிற்கு 50 பேருக்கு அழைப்பில்லை

(அழகன் கனகராஜ்)

ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு டிசெம்பர் மாதம் முதலாம் திகதி கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நடைபெறவுள்ள நிலையில், இந்த மாநாட்டிற்கு 50 பேருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.


மாநாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ள 5,800 பேருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த மாநாட்டிற்கு காலை 9.30 மணிக்கு முன்னர் வருகைதர  வேண்டும் எனவும் காலதாமதமாகி வருகை தருவோர் மாநாட்டிற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அவர் கூறினார். 

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளரகள் சந்திப்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கட்சி ஒழுக்காற்றுக்குழு விசாரணைக்கு முகம் கொடுக்கின்ற உறுப்பினர்களுக்கு மாநாட்டிற்கான அழைப்பு விடுக்கப்படவில்லை. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் அடங்குகின்றனர். மாகாணசபை உறுப்பினர்கள் இருவர், பிரதேச உறுப்பினர்கள் 11 பேரும் இந்த 50 பேருக்குள் அடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை கட்சியின் மாநாட்டில் கட்சியின் யாப்பு திருத்தம் மற்றும் நோக்கம், வேலைத்திட்டம், கொள்கை ஆகிய இரு யோசனைகளும் முன்வைக்கப்படும் என்பதுடன், உள்ளக பிரச்சினையை தீர்த்துக்கொண்டு அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கையை 2013ஆம் ஆண்டிலிருந்து துரிதப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார். 
(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE