கல்விமான்கள், புத்திஜீவிகள் கருத்து
117 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு சபாநாயகரிடம் கைய ளித்திருக்கும் குற்றப் பிரேரணையானது அரசியலமைப்புக்கு உட்பட்டது என் பதுடன், குற்றப் பிரேரணை மீதான நட வடிக்கைகளும் அரசியலமைப்புக்கு உட்பட்டவையே என ரஜ ரட்டை பல்கலைக்கழக முகா மைத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ரஞ்சித் விஜே வர்த்தன தெரிவித்தார்.
பிரதம நீதியரசர் ஒருவருக்கு எதிராகக் குற்றப் பிரேரணையொன்றைக் கொண்டு வருவதற்கு எமது நாட்டுச் சட்டத்தில் இடமுள்ளது. பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணையானது அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என்றும் ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சமூகவியல் மற்றும் மானுடவியல் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் யசாஞ்சலி ஜயதிலக தெரிவித்தார். பிரதம நீதியரசர் ஒருவருக்கு எதிராக குற்றப் பிரேரணையொன்று கொண்டு வரப்பட்டமை இது முதல் தடவையல்ல. இதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் கொண்டுவரப்பட்டுள்ளன என்றார்.
இலங்கையின் அரசியலமைப்புக்கு அமைவாகவே குற்றப் பிரேரணைக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்விடயத்தில் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் எமக்கு அனுபவம் உள்ளது. 1978ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்துக்கு அமையவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அரசியலமைப்பு, சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம் என்பன எமது நாட்டின் மூன்று தூண்கள். இவற்றுக்கிடையில் பிரச்சினையைத் தோற்றுவிக்க முயற்சிப்பது நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக அமைந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் அரசியலமைப்பு ஆகியவற்றுக்கு இடையில் காணப்படும் முரண்பாட்டின் வெளிப்பாடே பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையாகும். இவ்விடயம் நாட்டிற்கு அச்சுறுத்தலாக மாறுவதற்கு முன்னர் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டும். நாட்டின் அரசியலமைப்புக்கு அமைய இப்பிரச்சினை உடனடியாகத் தீர்க்கப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.