......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 21 October 2012

அரசாங்கத்துடன் பேச்சு நடத்த ரணில் தயார்

(யொஹான் பெரேரா)

நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித் துறை ஆகியவற்றிற்கு இடையில் தொடரும் மோதலை தீர்ப்பதற்காக அரசாங்கத்துடன் பேச்சு நடத்த ஐக்கிய தேசிய கட்சி தயார் என எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தேசிய சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ன தாக்கப்பட்டமையை கண்டிப்பதாக தெரிவித்த அவர், சுயாதீன நீதித்துறை மற்றும் சட்டவாக்கம் ஆகியவற்றின் சுயாதீன செயற்பாடுகளின் உறுதி தொடர்பில் தீர்மானிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்குமாறும் ஆலோசனை வழங்கினார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE