பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இச்சந்தேக நபர் மங்கதெனிய, கொட்டபிடிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து தோட்டாக்கள் சிலவும் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குண்டொன்றும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணையின்போது மங்கதெனிய மற்றும் பஸ்யாலை பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் பற்றிய தகவல்கள் பல கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் பஸ்யாலை, படலீய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.veerakesari
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.