கினிகத்தேனை – ஹட்டன் பிரதான வீதி, வட்டவளை பிரதேசத்தில் இன்று மாலை 5 மணியளவில் பஸ் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால் குறித்த பஸ்ஸில் பயணித்தவர்களில் சுமார் 15பேர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த ஹட்டன் பஸ் டிப்போவுக்குச் சொந்தமான பஸ் ஒன்றே இந்த விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறிப்பிட்ட பஸ் பயணிகளுடன் வட்டவளை டி காடன் விடுதிக்கு அருகிலுள்ள வளைவொன்றில் பாதையை விட்டு விலகி பாரிய பள்ளத்தில் குடைசாய்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு படுகாயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி, கண்டி போன்ற வைத்தியசாலைகளுக்கு மாற்றியதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
முலையகத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக வட்டவளை பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டடு வருகின்றனர்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.