நியூசிலாந்திற்கெதிரான டுவென்டி டுவென்டி, ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையிலேயே இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை சார்பாக உலக டுவென்டி டுவென்டி தொடரில் பங்குபற்றிய அஜந்த மென்டிஸ், முதலாவது போட்டியிலேயே உலக சாதனை படைத்து 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய போதிலும், அப்போட்டியிலேயே காயமடைந்திருந்தார்.
இரண்டாவது போட்டியில் பங்குபற்றியிருக்காத அவர், அதன் பின்னர் அனைத்துப் போட்டிகளிலும் பங்குபற்றியிருந்தார்.
இந்நிலையில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை அணியின் முகாமையாளர் சரித் சேனநாயக்க, உலக டுவென்டி டுவென்டி தொடரில் ஏற்பட்ட உபாதையிலிருந்து அஜந்த மென்டிஸ் இன்னமும் குணமடைந்து வருவதாகத் தெரிவித்தார்.
நியூசிலாந்துத் தொடரைப் பொறுத்தவரை அஜந்த மென்டிஸின் உடற்தகுததி மாத்திரமே தற்போதைய நிலையில் சந்தேகமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முதலாவது போட்டியில் காயமடைந்த பின்னர் மூன்றாவது போட்டியிலிருந்து அஜந்த மென்டிஸ் பங்குபற்றிய போதிலும், நோ நிவாரணிகளின் துணையோடே அஜந்த மென்டிஸ் போட்டிகளில் பங்குபற்றியதாகவும், அவர் இன்னமும் குணமடையவில்லை எனவும், அவருக்குத் தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்துத் தொடரில் பங்குபற்றவுள்ள அணிகள் அடுத்த வாரமளவில் தெரிவுசெய்யப்படும் எனத் தெரிகிறது.
நியூசிலாந்துத் தொடர் எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறவுள்ள டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டியுடன் ஆரம்பிக்கிறது
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.