......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 11 December 2016

இளமை தரும் ஆரஞ்சு பழச்சாறு

என்றும் இளமையுடன் வாழ எவருக்குத்தான் ஆசை இருக்காது. தற்போது 20 வயது இளைஞன் கூட நாற்பது வயது அடைந்தவன் போல் காட்சி அளிக்கிறார்கள். தலைமுடி நரைக்கிறது. தோலில் சுருக்கம் ஏற்படுகிறது. கண்கள் குழிவிழுந்து காணப்படுகின்றன.

Monday, 20 June 2016

உங்கள் இதயத்தை பாதுகாக்கும் உணவுகள் எவையென அறிய விரும்புகிறீர்களா? இதப் படிங்க!!

Best foods for your heartநம் உடலில் இதயம் என்பது எவ்வளவு முக்கியமான முதன்மையான உறுப்பு என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

Sunday, 8 March 2015

nintavur helth வாய்ப்புண்ணா..? அலட்சியம் வேண்டாம்

சிக்ஸ்பேக் உடம்­புக்­கா­ரர்கள் கூட இந்த வாய்ப்­புண்­ணிடம் இருந்து தப்­பிக்க முடி­யாது. ‘கடுகு சிறுத்­தாலும் காரம் குறை­யாது’ என்­பது போல வாயில் சின்­ன­தாக ஒரு புண் இருந்தால் கூட போச்சு. சரி­யாக சாப்­பிட முடி­யாது. கோப்­பியோ, டீயோ சூடாகக் குடிக்க முடி­யாது. தீராத நமைச்­சலும் வலியும் குத்­தலும் வாயில் இருந்து கொண்டு நம்மை பாடா­ய்ப்­ப­டுத்தும்.

Wednesday, 14 November 2012

ஆரோக்கியமாக இருக்க தினமும் ஒரு மிளகு சாப்பிட வேண்டும்


(thinakaran)
இயற்கை வைத்தியத்தில் ஒன்றான மிளகு ஆரம்ப காலத்தில் தினமும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தது. தற்போதைய காலத்தில் சமையலுக்கு மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். பாட்டி காலத்தில் தினமும் இரண்டு மிளகுகள் சாப்பிட்டு வந்தனர். அதனால் அவர்களை எந்த நோயும் நெருங்கியதில்லை. தற்போது விஞ்ஞானம் வளர வளர நோய்களும் அதிகரித்து வருகின்றன.

தூக்கம் குறையும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம்


(thinakaran)
பெண்களுக்கு தினமும் குறைந்தது 6 மணி நேர தூக்கம் அவசியம். சரியாக தூங்காவிட்டால் மார்பக புற்றுநோய் தாக்க அபாயம் அதிகம் என்று எச்சரிக்கின்றனர் டாக்டர்கள்.
பெண்களின் தூக்கம் குறைவதால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் உள்ள கேஸ்வெஸ்டர்ன் ரிசர்வ் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் செரில் தாம்சன் தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

Wednesday, 7 November 2012

கடலை மாவை வெச்சும் சூப்பரா ஃபேஸ் மாஸ்க் போடலாம்!!!


5 face masks using besan சமையலில் பயன்படும் கடலை மாவு சமையலறையில் பயன்படும் பொருளாக மட்டுமல்லால், ஒரு அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. இந்த கடலை மாவின் இரகசியம் அனைவருக்கும் தெரியும். எப்படியெனில் இதுவரை இந்த கடலை மாவை குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக தான் பயன்படுத்தி வந்தோம். ஆனால் தற்போது இந்த கடலை மாவின் உபயோகம் மக்களிடையே மிகவும் குறைவாக உள்ளது. ஏனெனில் இப்போது பல ஃபேஷியல், ஃபேஸ் பேக் போன்றவை அதிகம் வந்து அதன் பயன்பாட்டை குறைத்துவிடுகிறது.

எலுமிச்சையும் ஒரு சிறந்த அழகு பொருள்!!!

quick beauty fixes with lemon சிட்ரஸ் பழங்களில் ஒன்றான எலுமிச்சை நிறைய மருத்துவ குணம் நிரம்பியது. அதிலும் அந்த எலுமிச்சை உடல் நலத்திற்கு மட்டும் நன்மையை தருவதோடு, அழகுப் பொருட்களிலும் ஒன்றாக பயன்படுகிறது. எப்படியெனில் இதில் அதிகப்படியான வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. அத்தகைய அழகுப் பொருளான எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்தி, எவற்றையெல்லாம் சரிசெய்யலாம் என்று பார்ப்போமா!!!

உதட்டு வெடிப்பு அழகை கெடுக்குதா? ஈஸியா போக்க சில டிப்ஸ்...


Home Remedies Cracked Lips பொதுவாக வறட்சி, வெடிப்பு போன்றவை உதட்டில் வந்தால், மிகவும் வலியுடன், முக அழகையே அது கெடுத்துவிடும். இத்தகைய வெடிப்பு வருவதற்கு பருவநிலை மாறுபாடான கோடை, குளிர், காற்று போன்றவை காரணங்களாகும். ஏனெனில் உதட்டால், அளவுக்கு அதிகமாக எதையும் தாங்க முடியாது. மேலும் சில வெடிப்புகள் சில மருந்துகளினாலும், கெமிக்கல் கலந்த காஸ்மெட்டிக் பொருட்களை பயன்படுத்துவதினால், உடலில் நீர் வறட்சி இருந்தால், சோப்புகளை பயன்படுததுவதினாலும் ஏற்படுகின்றன.

தலையில் உள்ள பொடுகை நீக்க சில ஈஸியான டிப்ஸ்...


Tips Get Rid Dandruff தலையில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பொடுகு. அத்தகைய பொடுகு ஸ்கால்ப்பில் அளவுக்கு அதிகமாக இறந்த செல்கள் இருப்பதால் ஏற்படுகிறது. அவ்வாறு பொடுகு தலையில் அளவுக்கு அதிகமாக வந்துவிட்டால், கூந்தல் உதிர்தல், பிம்பிள், முகப்பரு மற்றும் நரை முடி போன்றவை ஏற்படும். ஆகவே இத்தகைய பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கு, இந்த பொடுகை போக்குவதற்கான செயல்களில் விரைவில் ஈடுபட வேண்டும். அதிலும் அந்த பொடுகை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, நீக்கிவிட முடியும். இப்போது அந்த பொருட்கள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, தலையில் இருக்கும் பொடுகை இயற்கை முறையில் நீக்குங்கள்.

முடி அதிகம் கொட்டுதா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...


நிறைய மக்கள் சைவ உணவுகளால் கூந்தல் வலுவிழக்கிறது என்று நினைக்கின்றன. உண்மையில் சைவ உணவுகளால் கூந்தலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆனால் எப்படியோ அந்த சைவ உணவுகளால் இதயம் ஆரோக்கியத்துடன் இருப்பதோடு, உடல் எடை குறைகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேப் போல் ஒரு சில சைவ உணவுகளாலும் கூந்தல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

உயரம் குறைவா இருக்கீங்களா? கவலைய விடுங்க....


உடலில் போதிய சத்துக்கள் இல்லாத காரணத்தினால், சிலர் குட்டையாக போதிய உயரமின்றி காணப்படுகின்றனர். அவ்வாறு குட்டையாக இருப்பது பிடிக்காத காரணத்தினால், அவர்கள் நிறைய உடற்பயிற்சிகள், கடைகளில் விற்கும் சில உயரத்தை அதிகரிக்கும் பொருட்களை வாங்கி சாப்பிடுகின்றனர். இருப்பினும் எந்த ஒரு பலனும் இல்லாமல், தோல்வியை தான் சந்திப்பர்.

மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த மூலிகைச்செடிகள்!!!


இன்றைய காலத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும் அத்தகைய மன அழுத்தத்தை குறைக்க நிறைய உடற்பயிற்சிகள் மற்றும் உணவுகள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொண்டு, அதனையும் பின்பற்றி மன அழுத்தத்தை குறைத்து வருகின்றனர். ஏனெனில் மன அழுத்தம் இருப்பதால், உறவுகளில் பிரச்சனை, அலுவலகங்களில் பிரச்சனை மற்றும் உடலில் கூட பிரச்சனை ஏற்படுகின்றன. ஆகவே இப்போது அந்த மன அழுத்தத்தை குறைக்க ஒரு சில மூலிகைச்செடிகள் இருக்கின்றன. இவை மனதை அமைதிப்படுத்தி, ரிலாக்ஸ் செய்கின்றன. இப்போது அவை என்னவென்று தெரிந்து கொள்ளலாமா!!!

ரோஸ்மேரி
மூலிகை செடிகளில் ஒன்றான ரோஸ்மேரி, சமைப்பதற்கு மட்டும் பயன்படுத்துவதில்லை மற்ற பயன்களுக்கும் பயன்படுகின்றன. அதிலும் மன அழுத்தத்தை குறைக்கப் பெரிதும் பயன்படுகிறது. மேலும் இவை உடல் தசைகளில் ஏற்படும் வலிகளுக்கும் சிறந்தது. மேலும் இவற்றால் செய்யப்படும் எண்ணெயை தலைக்கு தேய்த்து வந்தால், மூளையில் ஏற்படும் அழுத்தம் குறைந்து ரிலாக்ஸ் ஆகிவிடும்.
]
லாவண்டர்
நிறைய இடங்களில் லாவண்டர் என்ற வார்த்தையை கேட்டிருப்போம். ஏனெனில் இந்த செடியில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இவற்றால் ஹார்மோன்களில் ஏற்படும் பாதிப்பு சரியாகும். மேலும் இவற்றால் செய்யப்படும் எண்ணெயை வைத்து உடலுக்கு மசாஜ் செய்தால், உடல் நன்றாக இருக்கும். மேலும் இதன் சுவையில் தயாரிக்கப்பட்டிருக்கும் டீயை குடித்தால், நிச்சயம் மன அழுத்தம் குறையும்.
கிரீன் டீ
கிரீன் டீயின் நன்மைகள் நன்கு தெரியும். ஆனால் அந்த கிரீன் டீயை குடித்தால், மன அழுத்தம் குறையும் என்பது தெரியாது. உண்மையில் தினமும் 3-4 கப் கிரீன் டீ குடித்தால், மன அழுத்தம் குறையும். இது ஒரு சிறந்த நிவாரணி. மேலும் இவற்றில் குறைவான அளவில் கலோரிகள் இருப்பதால், உடல் எடையும் குறையும்.
சீமை சாமந்தி
இந்த பூ ஒரு சிறந்த மூலிகைச்செடிகளில் ஒன்று. இது காய்ச்சலால் ஏற்படும் ஒருசில வலிகளை சரிசெய்யும் சிறந்த மருந்துவ குணமுள்ள பூ. உடல் வலி இருப்பவர்கள், இந்த பூக்களை அரைத்து, உடல் முழுவதும் தடவி, குளித்து வந்தால், உடல் வலி நீங்குவதோடு, அதன் மணத்தால் மன அழுத்தம் குறைந்தது, உடலும் அழகாகும்.
மணற்பூண்டு
மணற்பூண்டு என்பது ஒருவித மன அழுத்தத்தை குறைக்கும் மூலிகைச் செடி. இதன் இலையை அரைத்து உடலுக்கு தடவினால், தசைகள் ரிலாக்ஸ் ஆவதோடு, மூளையும் நன்கு ரிலாக்ஸ் ஆகும். முக்கியமாக இது மனதில் ஏற்படும் தேவையில்லாத வலிகளை சரிசெய்துவிடும் அற்புதமான செடியும் கூட. ஏனெனில் அதன் நறுமணம் அத்தகைய மந்திரத் தன்மையுடையது.





மன அழுத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்!!: ஆய்வில் தகவல்


மனஅழுத்தம் பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் என்று பல்வேறு நிபுணர்கள் கூறியுள்ளனர். அதே சமயம் சிறிய அளவிலான மன அழுத்தம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறிந்துள்ளனர்.

Monday, 5 November 2012

கேரட் பன்ச்


என்னென்ன தேவை?
கேரட் - 4, 
இஞ்சி - 1 துண்டு, 
ஆப்பிள் - 1, 
வெல்லத் தண்ணீர் - 4 டீஸ்பூன்.
ADD TEXT HERE