......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 26 November 2015

ninthavur / முதுமையடையும் போது விட்டகலும் நினைவாற்றல்

நினைவாற்றல் பிறப்புடன் வரும் திறனும் ஒன்று என்றாலும் சில முறைகளைப் பின்பற்றினால் பெருக்கிக்கொள்ள இயன்ற திறனேயாகும்.
“நினைவு அனைத்தையும் காக்கும் கருவூலம்” என்றார் சிசரோ. நினைவு மனதின் களஞ்சியமாகும் என்றார் தோமஸ் வில்சன்.
 “ஒரு மனிதனுடைய உண்மையான உடைமை அவனது நினைவாற்றலே என்பது ஸ்மித் கூறிய கருத்து. நினைவே அறிவின் தாய் என்று பிளேட்டோவும் நினைவின் குறைவில்லாப் பெரும் சுரங்கத்தில் காலமெல்லாம் திரண்ட எல்லையில்லா நிதியங்கள் நிறைந்து ஒளிர்கின்றன என்று ரோஜர்ஸ¤ம் கூறியிருக்கின்றனர்.
எல்லா உயிர்களிடமும் தமது பழைய அனுபவங்களைச் சேர்த்து சேமித்து வைக்கக்கூடிய திறன் உண்டு. இத்திறனை நினைவு என்பர். இத்திறனைப் பயன்படுத்தலை நினைவுகூர்தல் என்பர்.
நினைவு கூர்தல் பழைய நிகழ்ச்சிகள், எண்ணங்கள் முதலியவற்றைத் திருத்தமாகக் குறித்து அவை தற்சமயமும் தம்முடனிருப்பது போல் அவற்றைப் பயன்படுத்தும் செயலாகும். நினைவு பல வகைகளில் பிரித்து விளக்கப்படுகிறது.
1. தற்செயல் நினைவு, 2. திட்டமிட்ட நினைவு, 3. தெளிவான நினைவு, 4. மங்கிய நினைவு, 5. மேற்கோள் நினைவு, 6. நோக்கல் நினைவு, 7. நெட்டுரு நினைவு
நல்ல நினைவு என்பது பல காலம் கற்றவற்றை மனத்திருத்தும் திறனையும்,. சரியாகத் தெளிவுடன் கற்றவற்றை வேகமாக மீட்டுக்கொள்ளும் திறனும் கொண்டது.
சிலருக்கு நினைவாற்றல் அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் இருப்பது உண்மை. இருக்கும் நினைவாற்றலை அழிப்பவை சில வருமாறு:
1. வயது, 2. கவலை, 3. அதிர்ச்சி, 4. தலையில் அடி, 5. களைப்பு, 6. நோய்கள், 7. நம்பிக்கை இன்மை
புலியுடன் போராடியோர் வயதால் வலிமை இழந்து புல் தடுக்கி விழுந்திருக்கிறார்கள். படிக்கட்டுகளும் பாத்றூம்களும் பதம் பார்த்துக்கொண்டிரு க்கின்றன. எத்தனையோ பொறுப்பு சுமைகளைத் தாங்கியவர்கள் தம்மைத் தாங்க பொல் ஊன்ற வேண்டியதாகிவிடுகிறது. புலன்கள் வயது ஏற, ஏற தம் வலிமைகளைப் படிப்படியாக இழக்கின்றன. நினைவாற்றல் குறைவதில் ஆச்சிரியமில்லை.
தமக்கு நன்கு தெரிந்த நண்பர்களிடமே நீங்கள் யார்? உங்களைத் தெரியவில்லையே என்கிறார்கள். அன்புக்குரியவரை இழந்த தால் வாழ்க்கையில் பெரும் ஏமாற்றத்தால் கவலை வாய்ப்பட்டவர்கள் தம்மையே மறந்திருப்பர். உண்டோமோ, உறங்கினோமோ என்பது கூட அவர்களுக்கு நினைவிருப் பதில்லை.
அதிர்ச்சி நரம்பு மண்டலத்தைப் பிடித்து உலுக்குகிறது. மூளை பாதிக்கப்பட்டு பேச்சு மூச்சற்றுக் கிடத்தல், அடிபட்ட காயங்கள் ஆறி எழுந்தபோது குழந்தை ஒன்றின் நிலை போலவே இருத்தல்
களைப்பு,நோய்கள் நம்பிக்கை இன்மை போன்றவைகளால் பலருக்கு நினைவில் லாமல் போகின்றது. நினைவுபடுத்த முயன்றாலும் முடிவ தில்லை. மறந்து விடுகிறோம். கற்றவைகள் வலு விழுந்து மறந்து போகின்றன. மறத்தல் ஏன் ஏற்படுகின்றது?
1. காலப் போக்கில் கற்றவற்றைப் பயன்படுத்தாமல் விட்டு வைத்தல்.
2. மாறுபட்ட மன ஆயத்த நிலை சந்தர்ப்பங்கள்.
3. முன்னே கற்றவை பின்னோக்கத் தடை
4. அச்சம், தீவிரம் போன்ற தீவிர மன வெழுச்சிகள்
5. கற்றவற்றில் அக்கறையும், ஆர்வமும் குறைத்தல்
6. நம் தன்மானத்தைக் குறைக்கக் கூடிய நிகழ்ச்சிகளும், எண்ணங்களும், குற்ற உணர்ச்சியைக் கொடுக்கக் கூடிய நிகழ்ச்சிகளும் நம் நனவிலி நிலைக்கு ஒடுக்கப்படுதல்
7. முடியாமல் தடைப்பட்டுள்ள செயல்கள் நினைவில் இருக்கும் முழுமையாக செய்து முடிக்கப்பட்ட செயல்கள்.
8. வயது முதிர்ச்சியின் காரணமாக நரம்புத் தொகுதியில் எற்படும் உடலியல் மாற்றங்கள்
9. மறதி நோய், உளப்பிறழ்வு போன்றவை


(மூலம்: thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE