நடைப்பயிற்சி உடல் நலத்துக்கு சிறந்தது என்ற பொதுவான கருத்து உள்ளது, தற்போது நடைப்பயிற்சி முதியோர்களின் நினைவாற்றல் மற்றும் அறியும் திறனை மேம்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் போஸ்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர், அதற்காக 18 முதல் 31 வயதுள்ள 29 இளைஞர்கள் மற்றும் 55 முதல் 82 வயது வரையிலான 31 முதியோர்களை ஆய்வுக்கு உட்படுத்தினர்.
அவர்களுக்கு ‘ஆக்டிகிராப்’ என்ற சிறிய கருவியை அவர்களது உடலில் பொருத்தினர். அக்கருவி நடை பயிற்சியின் போது அவர்கள் நடக்கும் விதம் குறித்த தகவல்களை பதிவு செய்தன. மேலும் நரம்பியல் மனோதத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது.
அதன் மூலம் அவர்களின் நினைவாற்றல் திறன், திட்டமிடுதல் மற்றும் பிரச்சினைகளை தீர்க்கும் விதம் குறித்து அறியப்பட்டது. அதில், நடைப்பயிற்சி முதியோர்களின் நினைவாற்றல் மற்றும் செயலாக்கத்தை அதிகப்படுத்தியது தெரியவந்தது.
(மூலம்: news1st)

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.