......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 16 July 2013

மு.கா தனித்துப் போட்டி

-றிப்தி அலி

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட கூட்டம் நேற்று திங்கட்கிழமை இரவு கொழும்பில் நடைபெற்றுள்ளது. இதன்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் வடக்கு, மத்திய மற்றும் வட மேல் ஆகிய மாகாண சபை தேர்தல்களில் மரச் சின்னத்தில் போட்டியிடப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எம்.ரீ.ஹசன் அலி தெரிவித்தார்.

எனினும் வட மாகாண சபை தேர்தலில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டால் அது தொடர்பில் கவனத்திற் கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.

எனினும் அது தொடர்பாக இதுவரை எந்தவித கோரிக்கைகளும் விடுக்கப்படவில்லை என ஹசன் அலி மேலும் தெரிவித்தார்.



(மூலம்: http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/75129-2013-07-16-02-42-28.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE