......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 16 June 2013

ஜனாதிபதி மீதான நம்பிக்கை கேள்விக்குறியாகியுள்ளது: பிரபா எம்.பி.

'ஜனாதிபதியின் மீது கொண்டிருந்த எனது நம்பிக்கை இன்று கேள்விக்குறியாகியுள்ளது. அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றேன் என்பதனால் தமிழ் இனத்திற்கு எதிரான விடயங்களுக்கு அவர்களுக்கு ஜால்ரா போடுவதற்கு நான் தயாராக இல்லை'  என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

'அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.  அவர்களிடமிருந்து தமிழ் மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுக் கொடுப்பதற்கேயொழிய தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கும் உரிமைகளை பறித்து அரசாங்கத்திற்கு கொடுப்பதற்கு அல்ல' எனவும் அவர் தெரிவித்தார்.

13ஆவது திருத்த சட்டம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக ஊடகங்களுக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

'2010ஆம் ஆண்டு 18ஆவது திருத்த சட்டத்தின் மூலமாக அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்தது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களுக்கு தீர்வொன்றினை வழங்குவார் என்றும் அதேசமயம் கொழும்பு மாவட்டத்திலுள்ள தமிழ் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் கவனிப்பாரற்று இருக்கும் களுத்துறை, கேகாலை மாவட்ட தோட்டத் தொழிலாளர்களின் அபிவிருத்திக்காவுமேயொழிய ஏற்கனவே தமிழ் மக்களிடம் இருக்கும் எதனையாவது பரித்து அரசாங்கத்திற்கு கொடுப்பதற்காக அல்ல என்பதை மக்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 

கொழும்பு மாவட்ட தமிழ் பாடசாலைகளின் அபிவிருத்திகளை என்னால் அரசாங்கத்தின் மூலம் செய்துகொடுக்க முடிந்துள்ளது. கொழும்பு களுத்துறை மாவட்டங்களிலுள்ள ஆசிரியர் பற்றாக்குறைகளை புதிய தமிழ் ஆசிரியர்கள் நியமனம் மூலம் நிவர்த்தி செய்ய முடிந்துள்ளது. 

அதேசமயம் களுத்துறை கேகாலை மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டப் புறங்களிலுள்ள பாதைகளை செப்பனிட்டு மேலதிக அபிவிருத்திகளை செய்யக்கூடியதாகவும் உள்ளது. 

கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் பிற மாவட்டங்களிலும் அபிவிருத்தியை செய்யக்கூடிய வரப்பிரசாதத்தை நான் அரசாங்கத்திடமிருந்து பெற்றுள்ளேன். வெறுமனே எதிர்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டு அரச எதிர்ப்பு வசனங்களைப் பேசி ஊடகங்கள் மூலமாக அரசியல் செய்வதில்லை. என்னால் செய்யப்பட்ட பல அபிவிருத்திகளைக் கூட விளம்பரப்படுத்தியதில்லை.

அதேசமயம் தமிழ் மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் போக்குகளை கடந்த காலங்களில் அரசாங்கத்திற்குள்ளே இருந்து கொண்டு விமர்சனம் செய்தும் கண்டித்துமுள்ளேன். 

13ஆவது திருத்த சட்டத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தக் கூடாது என்பதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்த விடயத்தில் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைகளுடன் இணைந்து முன்னின்று செயல்பட்டேன். 

இன்று 13வது திருத்த சட்டத்தில் அரசாங்கம் கைவைக்கின்றது. இனவாதம் கொண்ட பௌத்த பிக்குகளின் கூக்குரலுக்கும் இனவாத சிங்கள அரசியல் கட்சிகளின் எதிர்ப்பிற்கும் அடிபணிந்து ஜனாதிபதி இன்று 13வது திருத்த சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர முயற்சிக்கின்றார். அப்படியாயின் இன்று நடைபெறுவது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

ஜனாதிபதியின் மீது கொண்டிருந்த எனது நம்பிக்கை இன்று கேள்விக்குறியாகியுள்ளது. அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றேன் என்பதனால் தமிழ் இனத்திற்கு எதிரான விடயங்களுக்கு அவர்களுக்கு ஜால்ரா போடுவதற்கு நான் தயாராக இல்லை. 13வது திருத்த சட்டத்திலுள்ள மாகாணங்கள் ஒன்றிணையும் அதிகாரத்தை மட்டும் கூட நீக்க அரசாங்கம் முற்பட்டால் அதற்கு ஒரு போதும் ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை. 

13பிளஸ் என்று பகிரங்கமாக அறிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று தனது வாக்குறுதியிலிருந்து தவறியுள்ளார். இந்த அரசாங்கத்திற்கு 7வது நாடாhளுமன்றத்தில் முதல்முதல் எதிர்கட்சியிலிருந்து ஆதரவு வழங்கியது நானே.  அரசாங்கத்தின்  நிலைப்பாடு தமிழ் மக்களுக்கு எதிராக இருப்பின் அரசாங்கத்திலிருந்து வெளியேறும் முதல் முதுகெலும்புள்ள அரசயல்வாதியாக நானே இருப்பேன். 

13வது திருத்த சட்ட மாற்றத்திற்கு இன்று அரசாங்கத்தில் இருக்கும் இடதுசாரி அமைச்சர்களும் சரி வேறு அமைச்சர்களாயினும் சரி  எதிர்ப்பை தெரிவித்தாலும் இறுதியில் ஒரு சில போலி நியாயங்களை தமிழ் மக்கள் முன் நிறுத்தி நழுவி அரசாங்கத்திற்கு சாதகமாக செயல்பட்டு விடுவார்கள் என்பது வரலாற்று தெரிந்தவர்களுக்கு புரியும்' என்றார்.  


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/71071-2013-06-16-09-03-32.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE