இலங்கை போன்ற சிறிய நாட்டில் சிக்கலை ஏற்படுத்தும்
தனிப்பட்ட ரீதியில் பரிசீ லித்துப் பார்க்கும் போது 13 ஆவது அரசிய லமைப்பு திருத்தத்தில் அடங்கியுள்ள பொலிஸ், காணி அதி காரங்கள் இக் காலகட்டத்தில் நாட்டுக்குத் தேவையற்றதென பிரதமர் டி. எம். ஜய ரத்ன தெரிவித்தார்.
பொலிஸ், காணி அதிகாரங்களை வழங் குவதால் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகும். இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டில் இவை வீண் மோதல்கள் உருவாவதற்கு வழியேற்படுத்தலாமென பிரதமர் தெரிவித்தார்.
பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
இஸ்ரவேலும், ஆப்கானிஸ் தானும் சிவில் யுத்தத்தை எதிர் கொண்டுள்ளன. மேற்குலக அழுத்தங்களால் இலங்கையில் மீண்டும் அரசியல் ஸ்திரமற்ற நிலைமையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது தெரிகிறது.
நாட்டின் பொருளாதார வேகத்தைச் சீர்குலைப்பதே இக்குழுக்களின் நோக்க மாகும்.
மனிதர்கள் ஆன்மீக ரீதியில் கட்டி எழுப்பப்பட வேண்டும் என்பதே மதங் களின் அடிப்படை நோக்கமாகும். சகல மதப் போதகர்களும் சிறந்த சமூகத்தைக் கட்டி எழுப்பவே போதனை செய்கின்றனர். மதங்களைச் சகலரும் கெளரவிக்க வேண்டும். தமது மதத்தைப் போன்று பிறரின் மதமும் பெறுமதி மிக்கது. மதங்கள் இனங்களை குறைவாகக் கருதலாகாது.
ஊடக சுதந்திரம் ஏற்படுத்தப்படுவதை அரசு என்ற வகையில் நாம் ஏற்க வேண்டும். ஆனால், சில ஊடகங்கள் பொறுப்பின்றி செயற்படும் நேரங்களும் உள்ளன. ஊடகத்திலுள்ள சொற்ப குழுவினரே நாட்டில் பிரச்சினையை உருவாக்கப் பார்க்கின்றனர்.
பொதுவாக குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இவர்கள் செயற்படு கின்றனர்.
அநேக ஊடகங்கள் மத ஒழுங்குகளுக்கு இயைபாகவே நடக்கின்றன. அது பாராட்டப்பட வேண்டும். ஊடக சுதந் திரத்தை புத்திசாதுரியத்துடன் பயன்படுத்தல் அவசியம்.
அரசியல்வாதிகளின் ஊழல், மோசடிகளை வெளிப்படுத்துவது ஊடகங்களின் பொறுப்பாகும்.
அமைச்சரவை கூட்டங்களில் ஊடகச் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி சில வேளைகளில் சிறப்பாக கருத்து தெரிவிப்பார்.
சரியான செய்திகள் தொடர்பாக உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலமுறை அவர் கூறியுள்ளார்.
அறிவை மேம்படுத்தி மக்களை ஆட்கொள்ளச் செய்யும் பொறுப்பு ஊடகத்துக்கு உண்டு.
இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.
பிரதமர் அலுவலக மேலதிக செயலர் கலாநிதி ஐ. எச். கே. மஹாநாம, புத்தசாசன அமைச்சின் மேலதிக செயலர் ஜே. ஏ. ஏ. என். கன்னங்கர பெளத்த விவகார ஆணையாளர் நாயகம் சந்திர பிரேம கமகே உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.
(மூலம்:http://www.thinakaran.lk/Vaaramanjari/2013/06/16/?fn=n1306164 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.