......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 10 June 2013

மன்னார் நீதிமன்றம், நீதவானை அச்சுறுத்திய விவகார வழக்குகள் ஒத்திவைப்பு

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் மன்னார் முன்னாள் நீதவான் அந்தோனிப்பிள்ளை யூட்சனுக்கு தொலைபேசியூடாக கொலை மிரட்டல் விடுத்தமை ஆகிய விவகாரங்கள் தொடர்பான வழங்குகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இவ்விரு வழக்குகளும், மன்னார் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி இரு வழக்குகளையும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மன்னார் மாவட்ட நீதவான் ஆனந்தி கணகரட்னம் முன்னிலையில் இவ்விருவழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

மன்னார் நீதிமன்றத்தின் மீது கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட 52 பேரும் இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். 

இந்நிலையில், விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த வழக்கினை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

அத்துடன், மன்னார் முன்னாள் நீதவான் அந்தோனிப்பிள்ளை யூட்சனுக்கு  தொலைபேசியூடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதான வழக்கும் இன்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இவ்வழக்கின் சந்தேகநபரான அமைச்சர் றிஸாட் பதீயுதீன், நீதிமன்றில் ஆஜராகியிருந்தார். குறித்த வழக்கினையும் செப்டெம்பர் 9 ஆம் திகதிக்கே நீதவான் உத்தரவிட்டார்.


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/70279-2013-06-10-08-11-31.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE