வீட்டுப் பணிப்பெண்களின் உரிமை தொடர்பில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக வாராந்தத்தில் ஒருநாள் தொழில் வழங்குனர் தமது பணியாளர்களுக்கு விடுமுறை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டிருப்பதாக ‘சவூதி கசட்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி விடுமுறை தினத்தில் வீட்டில் பணியாற்றும் பணிப்பெண்கள் அல்லது வாகன ஓட்டுனருக்கு அதற்கான மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்றும் இது தொடர்பில் இரு தரப்புக்கும் இடையில் உடன்படிக்கை எட்டப்பட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தவிர தொழிலாளர் மற்றும் தொழில் வழங்குனருக்கு இடையில் வங்கிக் கணக்கு பேணப்படுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தொழில் வழங்குனர் மாதாந்தம் பணியாளரின் வங்கிக்கணக்கில் அவரது சம்பளத்தை வைப்பில் இட வேண்டும். இதன் மூலம் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என சவூதி தொழில் துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.(மூலம்: http://www.thinakaran.lk/2013/06/10/?fn=w1306104 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.