......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 10 June 2013

மதுபோதையில் வாகனம் செலுத்திய நபரின் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து

மது போதையில் வாகனம் செலுத்திய இளைஞனின் வாகன அனுமதிப்பத்திரம் களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளது.

வெல்லாவெளி பிரதேசத்தினை சேர்ந்த ம.நிலோஜன் என்பவரின் வாகன அனுமதிப்பத்திரமே இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது.
குறித்த சாரதி முச்சக்கர வண்டியில் பயணிகளை ஏற்றிக் கொண்டு பொலிஸாரின் நிறுத்தல் சமிக்ஞையை பொருட்படுத்தாது வேகமாக சென்ற வேளை பொலிஸார் முச்சக்கரவண்டியை தொடர்ந்து சென்று சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

அப்போது சாரதி மது போதையில் இருந்தமை தெரிய வந்ததை அடுத்தே அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். குறித்த நபருக்கு நீதவான் 9500 ரூபா அபராதமும் விதித்ததுடன் வாகன அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்வதாகவும் அறிவித்துள்ளார் என தெரிய வருகிறது.


(மூலம்: http://www.virakesari.lk/article/northeast.php?vid=150 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE