......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 25 June 2013

தேர்தலில் வெற்றி பெறமுடியாது என்று தெரிந்தே பொய்யான பிரச்சாரங்களை ஹெல உறுமயவும் தேசிய சுதந்திர முன்னணியும் முன்னெடுக்கின்றன: வாசுதேவ

ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணியினால் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறமுடியாது. எனவே தான் 13ஆவது திருத்திற்கு எதிராக பொய்யான பிரசாரங்களை இக்கட்சிகள் முன்னெடுக்கின்றன என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

மாகாண சபைக்கான ஒற்றையாட்சியையே நாம் வலியுறுத்துகிறோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற 13ஆவது திருத்தத்தை பாதுகாக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
வடக்கில் தங்கத்தால் வீதிகளை செப்பனிட்டாலும் அம்மக்களுக்கு நன்மையில்லை. அவர்களுக்கு தேர்தலை வழங்க வேண்டும். அதன்போது அவர்கள் எவரைத் தெரிவு செய்தாலும் பரவாயில்லை என அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி தெரிவித்தார்.
இதுதான் யதார்த்தம். இதனை உணரவேண்டும். அன்று ஜே.ஆர். மாகாண சபை முறைமையைக் கொண்டுவந்த போது அதனை விடுதலைப்புலிகள் எதிர்த்தனர். பிரேமதாஸாவும் எதிர்த்தார்.
இது இந்தியாவால் பலாத்காரமாகக் கொண்டுவரப்பட்டது என்றார்கள். ஆனால், இந்திய அமைதிப்படையை நாம் தான் வரச்சொன்னோம். அதேவேளை, பிரேமதாஸ வெளியேறச் சொன்னார். அமைதிப்படை வெளியேறிது.
பலாத்காரமாக இந்தியா 13ஐ திணித்திருந்தால் அமைதிப்படை திரும்பிப் போயிருக்குமா? இன்று பொய்யான அடிப்படையை வைத்துக் கொண்டு ஹெல உறுமயவும், தேசிய சுதந்திர முன்னணியும் வட மாகாண சபைத் தேர்தலை எதிர்க்கின்றன.
இக்கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்களான சம்பிக ரணவக்க, விமல் வீரவன்ச ஆகியோர் சிங்கள இனவாதிகள். எனவே, இவர்களால் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதாலேயே 13ஐ எதிர்க்கின்றனர்.
வடக்கு தமிழ் மக்களின் உரிமைகளை பறித்து இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் அவர்களை அடிமைகளாக வைத்திருப்பதே இந்த இனவாதிகளின் அகராதியில் அர்த்தமாக இருக்கிறது.
மொழிப்பிரச்சினையால் ஆரம்பித்த பிரச்சினை பூதாகாரமாக வெடித்து 30 வருட கால யுத்தமாக மாறி முடிவடைந்துள்ளது. இந்த அழிவுகளுக்காக யாரை தூக்கில் போடுவது?
அழிந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அமைச்சர் ரெஜினோல்ட் குரே
வட மாகாண சபை தேர்தலை நடத்தக் கூடாதென்பது அரசாங்கத்தின் கருத்தல்ல. அது அரசிலுள்ள சில சிங்கள அடிப்படைவாதிகளின் கருத்தாகும்.
13ஆவது திருத்தத்தைப் பெற்றெடுத்த ஐ.தே.கட்சி இன்று இவ்விடயம் தொடர்பில் அமைதியை கடைப்பிடிக்கின்றது.

இனவாதிகளின் கூச்சல்களுக்கு இந்தியாவோ, அமெரிக்காவோ பயப்படப்போவதில்லை.


(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=5481 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE