விரக்தியடைந்துள்ளதாக இன்று கூறிய பிரித்தானியா, குற்றமிழைத்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியது. தங்காலையில் விடுமுறையை கழிக்கச் சென்றபோது பிரித்தானிய பிரஜையான ஹுராம் கொலை செய்யப்பட்டதுடன் அவரது துணைவி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு 18 மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால் விசாரணை செயன்முறைகள் இதுவரை தொடங்கப்படவில்லை என்பதையிட்டு பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் மிகுந்த வேதனையடைந்துள்ளதுடன் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்கின்றது. ஹுராம் சைக்கின் குடும்பத்திற்கு இது முக்கியமானதாக இருப்பதுடன் இலங்கைக்கு வரும் பிரித்தானிய சுற்றுல்லா பிரயாணிகளுக்கு சில உறுதிப்பாடுகளை வழங்கவும் மனச் சாந்தியை கொண்டுவரவும் நீதி வழங்கப்படுவது அவசியமாகும் என கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மூலம்: - See more at: http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/72187-2013-06-24-14-53-10.html#sthash.zst3pQAr.dpuf
)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.