......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 25 June 2013

வெலிங்டன் இராணுவ முகாமிலிருந்து இலங்கை வீரர்கள் வெளியேற்றம்


தமிழ்நாட்டின் குன்னூரில் உள்ள வெலிங்டன் இராணுவ பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றுவந்த இலங்கை இராணுவ அதிகாரிகள் இரண்டுபேரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கை இராணுவத்தின் இரண்டு அதிகாரிகளுக்கு நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள வெலிங்டன் இராணுவ முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. அண்மையில், பல்வேறு அரசியல் கட்சி சார்பில் வெலிங்டன் இராணுவ முகாம் முற்றுகையிடும் போராட்டமும் நடைபெற்றது.
இந்த நிலையில், வெலிங்டன் இராணுவ பயற்சி முகாமை நாளை முற்றுகையிடப்போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருந்தார்.
இந்நிலையே, வெலிங்டன் இராணுவ பயிற்சி முகாமில் இருந்த இலங்கை இராணுவ அதிகாரிகள் இரண்டு பேரும் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (விகடன்)


(- See more at: http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/72163-2013-06-24-12-35-34.html#sthash.QtqhLnTt.dpuf )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE