......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 20 June 2013

பள்ளத்தில் பஸ்...

 -எஸ்.ஸ்ரீதரன்

நுவரெலியா, சீதா-எலிய பகுதியில் பஸ் வண்டியொன்று விபத்திற்குள்ளானதில் நான்கு பேர் பலியாகியுள்ளதுடன், 87 பேர் காயமடைந்துள்ளனர். 

குறித்த பஸ்ஸில் 91 பேர் பயணம் செய்துள்ளனர். அதில் காயமடைந்த 80 பேர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பதுளையிலிருந்து நுவரெலியாவுக்கு மாணவர்களை ஏற்றிக்கொண்டு சுற்றுலா வந்த தனியார் பஸ்வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்து இன்று புதன்கிழமை மாலை 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இப்பஸ் வண்டியானது பாதையை விட்டு விலகிச்சென்று பள்ளத்தில் வீழ்ந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.

நமுணுகுல பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களே சுற்றுலா வந்துள்ளனர்.

சம்பவத்தில்,  பாலகிருஷ்ணன்(பெற்றோர்), கல்முனையை சேர்ந்த சகாப்தீன் (ஆசிரியர்), சுனில் சாந்த( சாரதி), பாரதிராஜா( நடத்துடனர்) ஆகிய நால்வருமே பலியாகியுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர். (படங்கள(படங்கள் - ஷெல்டன் ஹெட்டியாரச்சி) 



(மூலம்: http://tamil.dailymirror.lk/--main/71517-2013-06-19-13-06-07.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE