......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 20 June 2013

வடக்கு தேர்தலுக்கு முன் அதிகாரங்களில் மாற்றமில்லை:அரசு

-சந்துன் ஜயசேகர

செப்டம்பரில் நடைபெறவுள்ள வட மாகாண சபைத்தேர்தலுக்கு முன்னர் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படமாட்டாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இவ்வாறான திருத்தங்கள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சமர்ப்பிக்கப்படலாம். சகல அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளதனால் இரண்டு அல்லது இரண்டிற்கு அதிகமான மாகாண சபைகள் இணைவதை தடுக்கும் திருத்தம் இரண்டுவாரங்களுக்குள் சட்டமாக்கப்படும் என்றும் அரசாங்கம் கூறியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சரும், சபைத்தலைவருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இந்த விவகாரங்களில் உள்நாட்டு,வெளிநாட்டு சக்திகளின் அழுத்தத்திற்கு அரசாங்கம் அடிபணியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு எதிரான சக்திகளின் அழுத்தம் காரணமாகவே கடந்த மார்ச் மாதம்; நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. இதனை நாம் விளங்கிக்கொண்டுள்ளோம். 

அதேபோல, நாம் இப்போது முகம்கொடுத்துள்ள நிலைமையை இந்தியா விளங்கிக்கொள்ளும். இலங்கை மக்களுக்கு நல்லதை செய்வதற்கு இந்தியா எம்மை அனுமதிக்குமென நாம் எதிர்பார்க்கின்றோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/71547-2013-06-19-16-52-40.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE