சீனாவுடனான உறவு எந்த வகையிலும் இந்தியாவைப் பாதிக்காது
பிரசாத் காரியவசம்
|
இந்தியா, இலங்கையுடன் நெருக்கமான நட்பையும் உறவையும் கொண்ட நாடாகும்.
சீனாவுடனான வளர்ந்து வரும் நெருக்கமான உறவுகள் எந்த வகையிலும் அதற்குப் பாதகமாகமாட் டாதென புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை நாம் நட்புறவான நெருக்கமான நண்பராகக் கருதுகிறோம். இந்தியாவுடன் வலிமையுள்ள உறவுகள் இருக்க வேண்டும்.
அது பிராந்தியத்திலும் கடல் சார் பரப்பிலும் பாது காப்பை வழங்க வேண்டுமென்றும் தூதுவர் புது டில்லி யில் வெளிநாட்டு நிருபர்கள் கழக த்தில் பேசுகையில் தெரிவித்தார். சீனாவுடனான உறவுகள் மிக முக்கியமானதும் மிகப் பழை மையானதுமாகும்.
அபிவிருத்தி வாய்ப்பு களுடன் பிரதானமான அவதானத்தை அத்தொடர்புகள் கொண்டவை என்றும் தூதுவர் மேலும் தெரிவித்தார். தனது நாட்டில் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் சீனா பெரியளவில் பங்கு பற்றியுள்ளதாகவும் தூதுவர் தெரிவித்தார்.
சீனாவுடனான உறவுகளில் எந்தவொரு முரண்பாட்டையும் நாம் காணவில்லை. எந்த நாட்டினாலும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் பிராத்தியத்தில் சமாதானத்தையும் பாதுகாப்பையும் பாதிக்காது என்றும் தூதுவர் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு பிரச்சினை என்றால் எமக்கும் கூட பிரச்சினையாகும். நாம் இந்தியாவுக்கு அடுத்ததாக உள்ளோம். அதனால் நாம் ஏன் இந்தியாவுக்கு பிரச்சினைகளை உருவாக்க வேண்டும்? என்றும் தூதுவர் கேட்டுள்ளார். (எப்.எம்.)(மூலம்: http://www.thinakaran.lk/2013/06/03/?fn=n1306032 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.